ஈரோடு கிழக்கில் தேமுதிக தனித்துப் போட்டி.. வேட்பாளர் இவர்தான்!

Jan 23, 2023,03:10 PM IST
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர் பெயரையும் வெளியிட்டுள்ளது.


ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். மறுபுறம் அதிமுக கூட்டணி சார்பில் அதிமுக போட்டியிடும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலை தெரியவில்லை. இதற்கிடையே, விஜயகாந்த்தின் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதை அறிவித்த அக்கட்சியின் தலைவர் பொருளாளர் மனைவி பிரேமலதா விஜயகாந்த், வேட்பாளராக ஆனந்த் போட்டியிடுவார் என்றும் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், அதிமுக பல பிரிவுகளைக உடைந்து விட்டது. சின்னம் கிடைக்குமா என்று தெரியவில்லை. தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாங்கள் எந்தக் கூட்டணியிலும் தற்போது இல்லை என்றார்.

ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளராக தற்போது இருக்கிறார் ஆனந்த். எம்.எஸ்சி படித்தவர். 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஈரோடு  கிழக்குத் தொகுதியில் தேமுதிக வென்றது என்பது நினைவிருக்கலாம். அப்போது வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றார். அதிமுகவுடன் அத்தேர்தலில் தேமுதிக கூட்டணி வைத்திருந்தது. பின்னர் சந்திரகுமார் திமுகவில் போய் இணைந்து விட்டார்.

தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ், அதிமுக,  தேமுதிக, நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டிக்கு இங்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!

news

"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

news

குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு

news

ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்

news

ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!

news

நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்

news

வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

news

ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!

news

Short Story: காணாமல் போன கண்ணன்

அதிகம் பார்க்கும் செய்திகள்