ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி சந்திரகுமார் வேட்பாளராக போட்டியிடுவார் என திமுக தலைவர் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இருந்து வந்தார். சமீபத்தில் அவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு தற்போது இடைத் தேர்தல் வந்துள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது வேட்பு மனு தாக்கலும் தொடங்கியுள்ளது. ஜனவரி 17 ஆம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம். தொடர்ந்து ஜனவரி 18ல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்கள் வாபஸ் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாகும்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கில் திமுகவே போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியாகின. காரணம், காங்கிரஸ் தரப்பில் வலுவான வேட்பாளர் இல்லாத நிலையில் சிக்கலாகி விடக் கூடாது என்பதால் திமுக தானே போட்டியிட விரும்பியது. இதற்குப் பதில் வருகிற சட்டசபை பொதுத் தேர்தலில் காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதியை ஒதுக்கவும் திமுக முன்வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கில் திமுகவே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், திராவிட முன்னேற்றக் கழகம், இந்த தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது.
வருகிற 05-02-2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, திரு. வி.சி.சந்திரகுமார் (தி.மு.க.கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்) அவர்கள் போட்டியிடுவார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேமுதிகவிலிருந்து விலகி வந்தவர்
வி.சி சந்திரகுமார் தேமுதிகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர். கடந்த 2011 முதல் 2016 வரை ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேமுதிக சார்பில் எம்எல்ஏவாக பணியாற்றியவர். தேமுதிகவின் முதல் எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர். விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்ட பின்னர் ஆக்டிவ் அரசியலை விட்டு விலகியிருந்த சந்திரகுமார் பின்னர் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் அவர் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். நீண்ட காலமாக உரிய அங்கீகாரத்துக்காகக் காத்திருந்தார். தற்போது அது அவருக்குக் கிடைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
சட்டமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு 5 தொகுதிகளை கேட்க உள்ளோம்: கே.எம். காதர் மொகிதீன்
டாடாவின் புதிய சாதனை: ஒரே மாதத்தில் ஒரு லட்சம் கார்கள் விற்பனை!
இலங்கையில் பரபரப்பு.. கட்சி அலுவலகத்தில் வைத்து.. எதிர்க்கட்சி பிரமுகர் சுடப்பட்டார்!
தொடர் மழையால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி:ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்:அன்புமணி
அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 குறைவு!
அரபிக் கடல்.. வங்கக் கடல்.. 2 தாழ்வுகள்.. லேட்டஸ்ட் நிலவரம் என்ன.. மழை எப்படி இருக்கும்?
சிறப்புக் குழந்தைகளின் செல்லம்.. வசந்தா செல்வகுமாரி.. வியக்க வைக்கும் பெண்மணி!
{{comments.comment}}