சென்னை : லோக்சபா தேர்தல் 2024 ல் பதிவான ஓட்டுக்கள் இன்று நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் 38 இடங்களில் திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
திமுக கூட்டணி போட்டியிட்ட 40 தொகுதிகளில் 38 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. இது திமுக.,வின் பலமாக பார்க்கப்பட்டாலும் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது பின்னடைவு என்றே சொல்லலாம். 2019 லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. ஆனால் இந்த முறை பாஜக., மற்றும் அதிமுக கூட்டணியிடம் 2 தொகுதிகளை இழந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.

அதிமுக கூட்டணியில் அதிமுக 1 தொகுதியிலும், தேமுதிக ஒரு தொகுதியிலும் என 2 இடங்களில் மட்டுமே முன்னணியில் இருந்து வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதை விட கூடுதலான இடங்களிலேயே அதிமுக கூட்டணி முன்னணியில் இருந்து வருகிறது. அதே சமயம் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சி என்ற இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பாஜக கூட்டணி மூன்றாம் இடம் பிடித்துள்ளது. அதிலும் கூட பாஜகவுக்கு லாபம் கிடைக்கவில்லை.
பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி மட்டுமே தர்மபுரியில் முன்னிலையில் இருந்து வருகிறார். அங்கு பாமக ஏற்கனவே பலமான கட்சி என்பதால் இது பாமகவின் வெற்றியாகவே பார்க்கப்படும். அதிமுக கூட்டணி சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளரும், மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகனுமான விஜய பிரபாகரன் முன்னிலையில் இருந்து வருகிறார். அங்கு ஏற்கனவே தேமுதிகவுக்கு நல்ல வாக்கு வங்கி உள்ளது. விஜயகாந்த்தின் மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலை, காங்கிரஸ் சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூர் மீதான அதிருப்தி ஆகியவை தேமுதிகவுக்கு சாதகமாக மாறியுள்ளன.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!
"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு
ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்
ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!
நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்
வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!
Short Story: காணாமல் போன கண்ணன்
{{comments.comment}}