சென்னை: சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி திமுக இளைஞர் அணியின் மாநில மாநாடு நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
திமுக இளைஞர் அணி தலைவராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். இந்தப் பதவியை முன்பு வகித்து வந்தவர் மு.க.ஸ்டாலின். நீண்ட காலம் இளைஞர் அணிக்குத் தலைமை தாங்கி வந்த ஸ்டாலின் அந்தப் பதவியில் இருந்தபடியே அமைச்சர், மாநகராட்சி மேயர், துணை முதல்வர், திமுக செயல் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகளையும் வகித்தார்.

திமுக இளைஞர் அணி தொடங்கி கிட்டத்தட்ட 27 வருடமாக எந்தவிதமான மாநிலமாநாடும் நடத்தப்பட்டதில்லை. அந்த நிலையில் முதல் முறையாக கடந்த 2007ம் ஆண்டுதான் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதன் பிறகு மீண்டும் மாநில மாநாடு நடத்தப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் தற்போது 2வது மாநில மாநாடு நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

அதன்படி டிசம்பர் 17ம் தேதி சேலத்தில் 2வது இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தலைமையின் கீழ் திமுக இளைஞர் அணி வந்த பிறகு நடைபெறவுள்ள முதல் மாநில மாநாடு என்பதால் மிகப் பெரிய அளவில் மாஸ் காட்ட திமுக இளைஞர் அணி திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மாநாட்டிற்கு வருவார்கள் என்று இளைஞர் அணி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}