"இளைஞர் அணி மாநாடு".. அன்று அப்பா ஸ்டாலின்.. இன்று மகன் உதயநிதி.. களை கட்டும் திமுக!

Aug 26, 2023,01:13 PM IST
சென்னை: திமுக இளைஞர் அணி தோற்றுவிக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் இளைஞர் அணி மாநில மாநாடு என்பது 2007ம் ஆண்டுதான். அப்போது அது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மிகப் பெரிய மாநில மாநாடு அது.

அரசியல் கட்சிகளிலேயே இளைஞர்களுக்கு என்று தனி அணியை உருவாக்கிய முதல் கட்சி திமுகதான். அந்த வரலாறு திமுகவிடம் மட்டுமே உள்ளது. மிக மிக சாதாரணமான முறையில் ஒரு சலூன் கடையில் வைத்து இந்த இளைஞர் அணியை தோற்றுவித்தார் திமுக தலைவராக இருந்த மறைந்த மு.கருணாநிதி. 1968ம் ஆண்டு இளைஞர் அணி தொடங்கப்பட்டது. அப்போது அதற்குப் பெயர் கோபாலபுரம் இளைஞர் திமுக. இதுதான் திமுக இளைஞர் அணியின் விதை.



அதன் பின்னர் 1980ம் ஆண்டு முறைப்படி திமுக இளைஞர் அணி மதுரையில் தொடங்கப்பட்டது. அப்போதைய ஜான்சிராணி பூங்காவில் வைத்து இந்த இளைஞர் அணியை கருணாநிதி தலைமையில் தொடங்கியது திமுக. அப்போது நிர்வாகிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. 1982ம் ஆண்டு இளைஞர் அணியின் மாநில அமைப்பாளராக கருணாநிதியையே அறிவித்தனர்.  பின்னர் மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளராக அறிவிக்கப்பட்டார். 2017ம் ஆண்டு வரை ஸ்டாலினே இளைஞர் அணி செயலாளராக நீடித்து வந்தார்.

1982ம் ஆண்டு இளைஞர் அணி தொடங்கப்பட்டாலும் கூட மாநில மாநாடு என்பது நடத்தப்படாமலேயே இருந்து வந்தது. 2017ம் ஆண்டுதான் மாநில மாநாட்டை நடத்த திமுக தலைமை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து 2017ம் ஆண்டு நெல்லையில் முதல் திமுக இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெற்றது.



மிகப் பிரமாண்டமான பேரணியுடன் நடந்த இந்த மாநாட்டில் பல லட்சம் திமுகவினர் திரண்டனர். அப்போது மு.க.ஸ்டாலின்  உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தார். கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும் இருந்தார். முதல்வராக இருந்த மு.கருணாநிதி, அன்பழகன் உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டனர். 

இணையதள நேரடி ஒளிபரப்பு, பல மணி நேர பேரணி, கருணாநிதியின் 84வது பிறந்த நாள் சாதனைத் தொகுப்பு என பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த மாநாட்டில் இடம் பெற்றன. திமுக வரலாற்றிலேயே மிகப் பிரமாண்டமாக நடந்த முதல் மாநாடு என்ற பெருமையும் நெல்லை இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கு உண்டு.

தந்தை மு.க.ஸ்டாலின் தலைமையில் அப்போது இளைஞர் அணி மாநாட்டை நடத்திய திமுக தற்போது அவரது தனயன் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடத்தவுள்ளது. ஸ்டாலின் நடத்திய மாநாடு, பாண்டி மண்டலமான தென்னகத்தில் நடந்தது. இப்போது உதயநிதி ஸ்டாலின் நடத்தப் போகும் மாநாடு கொங்கு மண்டலத்தைக் குறி வைத்து ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளது.



திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தமிழ்நாட்டின் மேற்குமாவட்டங்கள்தான் பெரிதும் கை கொடுத்தன என்பதால் தொடர்ந்து அந்த மாவட்டங்களுக்கு திமுக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.  இந்த நிலையில் தற்போது இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு மூலம் லோக்சபா தேர்தலில் மிகப் பெரிய ஆதரவை இந்தப் பகுதி இளைஞர்களிடமிருந்து திரட்ட திமுக குறி வைத்திருப்பதாகவே கருதப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்