சென்னை: திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 17ம் தேதி நடக்கவிருந்த மாநாடு டிசம்பர் 27ம் தேதி நடைபெற உள்ளதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
மிச்சாங் புயல் சென்னையை புரட்டி போட்டு விட்டது. மிச்சாங் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத், தேவையானவற்றை தற்பொழுது அரசு செய்து வருகிறது. திமுகவினரும் இந்தப் பணியில் தீவிரமாக ஈடுட்டுள்ளனர்.
இந்நிலையில் திமுகவினர் அனைவரும் சென்னையில் தங்கி பணி செய்து வருவதாலும், முதல்வர் இது குறித்து பல கட்ட ஆலோசனை செய்து வருவதினாலும் திமுக இளைஞர் அணி மாநில மாநாடு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மிக்ஜாம்” புயலால் பெய்த பெருமழை - வெள்ளம் காரணமாக, சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி, மழை - வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், வருகிற 17-12-2023 அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட “தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு” தேதி மாற்றப்பட்டு, வருகிற 24-12-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் நிவாரணப் பணிகளில் திமுக இளைஞர் அணி தலைவரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளார். முதல்வருடன் இணைந்து அவர்தான் அரசு உயர் அதிகாரிகளை ஒருங்கிணைத்துப் பணிகளைப் பார்வையிட்டு வருகிறார். அவரும் களத்திலேயே இருக்கிறார். இதனால் மாநாட்டுப் பணிகளில் உதயநிதியால் இப்போது கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனாலும் கூட மாநாட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.
கலைஞர் 100 நிகழ்ச்சியும் ஒத்திவைப்பு
இதேபோல சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவிருந்த கலைஞர் 100 நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரையுலகம் சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபப்பட்டுள்ளது. மறைந்த திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியின் 100வது பிறந்த நாளையொட்டி திரையுலகம் சார்பில் இந்த நிகழ்ச்சியை டிசம்பர் 24ம் தேதி நடத்தத் திட்டமிட்டப்பட்டிருந்தது. தற்போது அதை ஒத்திவைத்துள்ளனர்.
ஏற்கனவே சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ள பார்முலா 4 கார்ப் பந்தயத்தையும் காலவரையின்றி மாநில அரசு ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}