டெல்லி: மெஃப்டால் எனப்படும் வலி நிவாரண மாத்திரையை பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் அதிகம் ஏற்படுவதாக, இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரித்துள்ளது.
மெஃப்டால் என்பது வலி நிவாரணி மாத்திரையாகும். மாதவிடாய் வலி, மூட்டு வலி, தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பயன்படுத்தும் மாத்திரை தான் இது. இம்மாத்திரையை பன்படுத்துவதினால் வலி சீக்கிரம் குறையும். இதனால் மாதவிடாய் வலி, மூட்டு வலி, தலைவலி போன்ற நாட்களில் வலி பொறுக்க முடியாத அளவுக்கு இருக்கும்போது பலரும் இதை உட்கொள்கின்றனர்.
ஆனால் இந்த மாத்திரைகள் அபாயகரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும், இதை பயன்படுத்தக் கூடாது என்றும் ஐபிசி என்னும் இந்திய மருத்துகளுக்கான தர நிறுவனம் அறிவித்துள்ளது. மருந்து பொருட்களுடன் தொடர்புடைய பாதகமான மருந்து எதிர்வினைகள் மற்றும் பாதகமான நிகழ்வுகள் பற்றிய தகவல்களைக் கண்காணிக்கும் இந்திய பார்மகோவிஜிலன்ஸ் அமைப்பு, தனது முதற்கட்ட ஆய்வில் மெஃப்டால் மருந்து மெஃபெனாமிக் அமிலம் ஈசினோபிலியா மற்றும் அமைப்பு ரீதியான அறிகுறிகளுடன் மருந்து எதிர்வினைகளைத் தூண்டுகிறது என்பதை கண்டறிந்துள்ளது.

இந்த மாத்திரைகளை உட்கொள்வதினால் எதிர் வினைகள் அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக வெள்ளை அணுக்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. மேலும், எரிச்சல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட வாய்ப்புகள் அதிகமாம். மெஃப்டால் மாத்திரைகள் சாப்பிட்ட 2 முதல் 8 வாரங்களுக்கு பின்னர் தான் விளைவுகள் தெரியும். ஆதலால் இந்த மாத்திரைகளை மருத்துவர்கள் அறிவுறுத்தல் இல்லாத காலங்களில் தவிர்க்க வேண்டும் என்று ஐபிசி தெரிவித்துள்ளது.
மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்
சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்
முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா
மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து
Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!
தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது
{{comments.comment}}