கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்ற யவை
இது திருக்குறள். அழியாத செல்வம் கல்வி செல்வம். கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. பிறருக்குக் கொடுத்தால் மற்ற செல்வம் எல்லாம் குறைந்து விடும். ஆனால், பிறக்கு கொடுத்தாலும் குறையாத ஒரே செல்வம் கல்வி மட்டும் தான். கல்வியின் சிறப்பை கூற தொடங்கினால் இன்று ஒரு நாள் போதாது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கல்வியை ஏன் இந்த நாளில் கொண்டாடுகிறோம் என்று பலருக்கும் கேள்வி இருக்கத்தான் செய்கிறது. அதற்கான விடை இதே. ஒன்றை கடைப்பிடிப்பதை விட உருவாக்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அத்தகைய கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு வாரி வாரி வழங்கிய பெருமகனாரை பெருமைப்படுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது இந்நாள்.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், சுதந்திரப் போராட்ட வீரருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினம் தான் நவம்பர் 11. அந்த நாளை தான் நாம் தேசிய கல்வி தினமாக கொண்டாடி வருகிறோம்.
தனக்கென சிறப்பு மிக்க வரலாற்றைக் கொண்டவர் மெளலானா அபுல் கலாம் ஆசாத். மதரீதியாக பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்து நின்று, சவாலான காலகட்டத்தில் இந்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்று, நாட்டின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
இந்தியாவின் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களை ஐஐடியை உருவாக்கியவர். பல்கலைக்கழக மானியக் குழுவை உருவாக்கியவர். இப்படிப்பட்ட மாபெரும் தலைவரின் பிறந்த நாளைத்தான் நாம் கல்வி நாளாக கொண்டாடுகிறோம்.
ஆனால் தேசிய கல்வி நாள் என்று ஒரு தினம் அனுசரிக்கப்படுகிறது என்றே பலருக்கும் தெரிவதில்லை. எத்தனை ஆசிரியர்களுக்கு இந்த தினம் பற்றி தெரிந்திருக்கிறது என்று கேட்டால், சந்தேகம்தான். அந்தளவில்தான் நமது சமூகம் இருக்கிறது. இன்று அனைவருக்கும் கல்வி என்பது பரவலாகியுள்ளது. குறிப்பாக பெண் கல்வி மிகச் சிறந்த நிலையை எட்டியுள்ளது. ஆனால் கல்வி இன்று விற்பனைப் பொருளாகி விட்டது. வணிகமயமாகி விட்டது. காசு இருந்தால் தான் கல்வி என்ற நிலை விரைவில் வந்து விடும் போல.
கல்வியின் நிலைமை மிகவும் கவலை கொள்ளும் அளவிற்கு போய் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் இதுபோன்ற நாட்கள் நமக்கு கல்வி குறித்த விழிப்புணர்வை மட்டுமல்லாமல், கல்வியை வியாபாரமாக்கக் கூடாது என்ற வேகத்தையும் நமக்குள் புகுத்த உதவும். தேசிய கல்வி தினமான இன்று, அதற்கான வழிமுறைகள் பற்றி ஆராய வேண்டியது நம் அனைவரின் கடமை!
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}