திருவனந்தபுரம்: இதுவரை வந்த கொரோனாவைரஸ் வேரியன்ட்களை விட தீவிரமாகப் பரவக் கூடிய புதிய வகை கொரோனாவைரஸ் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது. "JN 1" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் இந்தப் புதிய வகை கொரோனாவைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய கொரோனாவைரஸ் வகைகளை விட இது தீவிரமானதாக இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கரகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனையில் இந்த வைரஸைக் கண்டறிந்துள்ளனர்.

79 வயதான அந்த நபருக்கு இன்ப்ளூயன்ஸா பாதிப்பு ஏற்பட்டால் என்னெல்லாம் அறிகுறிகள் இருக்குமோ அதேபோன்ற அறிகுறிகள் இருந்தன. அவர் தற்போது கொரோனாவிலிருந்து குணமடைந்து விட்டார். இந்த வகை கொரோனாவைரஸ் வகை இன்னும் உலக அளவில் பெரிய அளவில் பரவவில்லை என்ற போதிலும் கூட இதுகுறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
என்னெல்லாம் அறிகுறிகள் தென்படும்?
இந்தியாவின் கடைசி கோவிட் அலையில் பரவிய ஓமைக்ரான் வகையின் ஒரு திரிபாக இந்த JN 1 வகை வைரஸ் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில்தான் இது முதன் முதலில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டது. அடுத்து சீனாவில் சில நாட்களுக்கு முன்பு இது கண்டறியப்பட்டது. தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வகை வைரஸ் தீவிரமானது என்றாலும் கூட பீதி அடையத் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து இதைக் கண்காணிக்க வேண்டியது அவசியம். வழக்கமான காய்ச்சல், மூக்கடைப்பு, தொண்டை வலி, தலைவலி, வயிற்று உபாதைகள் ஆகியவைதான் இந்த வகை கொரோனா பாதிப்புக்குள்ளானோரிடம் தென்படும் அறிகுறிகள் ஆகும். சிலருக்கு மட்டுமே மூச்சு விடுவதில் பிரச்சினை ஏற்படுகிறது. மற்றபடி உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் நான்கு, ஐந்து நாட்களில் குணமடைந்து விடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
{{comments.comment}}