சென்னை: நடிகர் விஷால் அரசியலுக்கு வரப் போவதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு SORRY அரசியல் குறித்து கேள்வி கேட்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் லால் சலாம் படம் வெளிவந்துள்ளது. 3, வை ராஜா வை படங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் லால் சலாம். இந்த படத்தில் மெய்தீன்பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.
விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள லைக்கா சார்பில் சுபாஷ் கரன் படத்தை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் பேசும்போது, லால் சலாம் படம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. படத்தை தயாரித்த லைக்கா ப்ரொடக்ஷன், இயக்குனர் ஐஸ்வர்யாவுக்கு, பட குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
அடுத்து லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க உள்ளேன். வேட்டையன் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் 20 சதவீதம் மீதம் உள்ளது என்றார் ரஜினிகாந்த்.
அடுத்து செய்தியாளர் ஒருவர், விஜய்யைத் தொடர்ந்து விஷாலும் அரசியலுக்கு வரப் போவதாக சொல்கிறார்களே, முதல்வர் வேட்பாளர்கள் என்று ஆரம்பித்தபோது, ஸாரி, அரசியல் வேண்டாம் என்று பளிச்சென்று கூறி விட்டு நகர்ந்தார் ரஜினிகாந்த்.
சில நாட்களுக்கு முன்பு விஜய் அரசியலுக்கு வந்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, வாழ்த்துகள் என்று கூறியிருந்தார் ரஜினிகாந்த். இதையடுத்து விஜய்யும், ரஜினிக்கு போன் செய்து நன்றி கூறினார் என்பது நினைவிருக்கலாம்.
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்
அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்
ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?
விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை
பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!
மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்
சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!
லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்
தம்பி அண்ணாமலைக்கு.. தமிழ் இனத்தின் மகனாக நாங்கள் துணை நிற்போம்.. சீமான்
{{comments.comment}}