மெஸ்ஸியைக் கட்டிப் பிடிக்கப் போறீங்களா?.. அப்படீன்னா குறுக்கே இந்த சூக்கோ வருவார்.. Be careful!

Jul 09, 2024,09:19 PM IST

மிலன்:   பாடிகார்ட் அப்படின்னு மலையாளத்தில் ஒரு படம் வந்தது.. அது அப்படியே தமிழில் காவலன், இந்தியில் பாடிகார்ட் என்று ஒவ்வொரு மொழியிலும் ஹிட்டடித்தது. இந்தப் படத்திற்குப் பிறகு பாடிகார்டுகள் குறித்த ஆர்வம் மக்களிடையே அதிகரித்தது. இந்த நிலையில், கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸியின் பாடிகார்ட் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.. காரணம், அவரது அதிரடி ஆக்ஷன் மற்றும் ரியாக்ஷன்கள்.


லியோனல் மெஸ்ஸி உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரர். உலகம் முழுவதும் அவருக்குக் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர். இவர் எங்கு போனாலும் ரசிகர்கள் கூட்டம் இவரை மொய்த்து விடும். கை குலுக்கவும், செல்பி எடுக்கவும், கட்டிப்பிடிக்கவும் ரசிகர்கள் துடிப்பார்கள். இப்படிப்பட்ட சூழலில் சிக்கிக் கொள்ளாமல் தப்புவதற்காகவே தனக்கென பிரத்யேகமாக ஒரு பாடிகார்டு வைத்துள்ளார் மெஸ்ஸி.




அந்த பாடிகார்டுதான் இப்போது பிரபலமாகி வருகிறார். அவரது பெயர் யாசின் சூக்கோ. சூப்பராக செயல்படுகிறார் சூக்கோ. மெஸ்ஸியின் மீது நிழல் கூட படியாமல் படு கேர்ஃபுல்லாக தனது வேலையைக் கவனித்து வருகிறார் சூக்கோ. இதனால்தான் அவர் பிரபலமாகியுள்ளார். ஒரு பாடிகார்டு எப்படி செயல்பட வேண்டுமோ, புத்திசாலித்தனமாக இருக்க வேண்டுமோ, க்விக்காக ரியாக்ட் செய்ய வேண்டுமோ அதை சூக்கோ சூப்பராக செய்கிறார் என்று அவருக்குப்


சும்மா சொல்லக் கூடாது. யாசின் படு வேகமாக செயல்படுகிறார். மெஸ்ஸியின் பின்னால் நிழல் போலவே நிற்கிறார். யாராவது அவரிடம் நெருங்கினால் மின்னல் வேகத்தில் அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார். மெஸ்ஸியுடன் யாரேனும் செல்பி எடுத்தால், தோள் மீது கை போட வந்தால் டக்கென போய் அதை எடுத்து விடுகிறார். மெஸ்ஸியை யாரும் தொடாமல் பார்த்துக் கொள்வதில் படு கவனமாக இருக்கிறார். மைதானத்தில் எங்கிருந்து யார் ஓடி வந்து மெஸ்ஸியைக் கட்டிபிடிக்க முயன்றாலும் அவர்களை விட படு வேகமாக ஓடி வந்து அவர்களைத் தடுத்து நிறுத்தி தூக்கிக் கொண்டு போய் விடுகிறார்.


இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அங்கு ராணுவத்தில் பணியாற்றியவராம். ஈராக், ஆப்கானிஸ்தான் போரின்போது கடற்படையில் பணியாற்றிய முன்னாள் கடற்படை வீரர். இன்டர் மியாமி கிளப் தலைவர் டேவிட் பெக்காம்தான், இவரை மெஸ்ஸிக்குப் பரிந்துரைத்தாராம்.  முன்னாள் கடற்படை வீரர் என்பதால் எல்லா வித்தைகளையும் கற்று வைத்திருக்கிறார் யாசின் சூக்கோ.




விளையாட்டுப் போட்டிகளின்போது மட்டுமல்லாமல், மெஸ்ஸி எங்கு போனாலும் கூடவே சூக்கோவும் செல்கிறார். மெஸ்ஸி குடும்பத்திற்கும் இவர்தான் பாடிகார்டு. பாடிகார்டு வேலை பார்த்தாலும் கூட சைடில் தனது சோசியல் மீடியா பக்கங்களிலும் படு ஆக்டிவாக இருக்கிறார் சூக்கோ. இவருக்கு இன்ஸ்டாகிராமில்  கிட்டத்தட்ட ஏழே முக்கால் லட்சம் பாலோயர்கள் உள்ளனர். பாக்ஸிங், தற்காப்புக் கலை, உடற்பயிற்சி உள்ளிட்ட வீடியோக்களை அதில் போடுகிறார்.

சமீபத்திய செய்திகள்

news

ரயில் டீசல் டேங்கர் வெடித்து தீவிபத்து.. விரிவான விசாரணை நடத்த எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை

news

அஜீத் குமார் மாதிரி.. 24 பேரோட குடும்பத்துக்கும் ஸாரி சொல்லுங்க சிஎம் சார்.. விஜய் ஆவேசப் பேச்சு

news

விஜய் தலைமையில்.. பிரமாண்ட தவெக போராட்டம்.. ஆயிரக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்!

news

சாமி பட வில்லன் நடிகர்.. கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.. திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்

news

Backbenchers இனி கிடையாது.. வகுப்பறைகளில் ப வடிவில் இருக்கைகளை போட தமிழக அரசு உத்தரவு!

news

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.. ராஜ்யசபா எம்.பியாக ஜூலை 25ல் பதவியேற்கிறார்!

news

ஏர் இந்தியா விமான விபத்து.. விமானி வேண்டுமென்றே செய்திருக்கலாம்.. பாதுகாப்பு நிபுணர் பகீர் கருத்து

news

அதிமுக - பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.. விஜய்யையும் சேர்க்க முயற்சிப்போம்.. அமித்ஷா

news

அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது.. விஜய்யை மறைமுகமாக சுட்டுகிறாரா ரஜினிகாந்த்?

அதிகம் பார்க்கும் செய்திகள்