சென்னை: பாமக சார்பில் இன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் கோரி சென்னையில் இம்மாதத்திற்குள் போராட்டம் நடத்த முடிவெடுத்த உள்ளோம் என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை மத்திய அரசிற்கே அதிகாரம் உண்டு என திமுக காரணம் காட்டி வருவதாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கோரி சென்னையில் இம் மாதத்திற்குள் மாபெரும் போராட்டம் நடத்த இருப்பதாக இன்று பாமக சார்பில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தீர்மானம் நிறைவேற்றினார். இது குறித்து அவர் பேசுகையில், உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை சுட்டிக்காட்டி சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தாவிட்டால் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு ரத்தாகும். 69% இட ஒதுக்கீடு ரத்தனால் அடுத்த நாளே திமுக ஆட்சி கவிழ்ந்து விடும். 69 சதவீத இட ஒதுக்கீடு 50 சதவீதமாக மாறினால் என்ன ஆகும். நாங்களெல்லாம் சும்மா இருக்க மாட்டோம் .மேடைகளில் இருப்பவர்கள் எல்லாம் சும்மா இருக்க மாட்டார்கள்.
தமிழ்நாடு கலவர பூமி ஆகும். நாங்க என்ன கேட்கிறோம். இந்த குழந்தைகளுக்கு கல்வியை கொடு, வாழ்க்கையில் முன்னேற்ற விட என்று தானே கேட்கிறோம். அதற்கு யார் யார் எந்த நிலையில் இருக்கிறார்கள் என கணக்கெடுப்பு நடத்து அவசியம். ஏன் பீஹாரில நடத்துறாங்க. முதல்வர் நிதீஷ் குமார் அவர்களுக்கு அதிகாரம் இல்லாமையா நடத்திருக்கிறார். தெலுங்கானாவில் நடத்தினார். ஹேமந்த் ரெட்டி அதிகாரம் இல்லாமலா நடத்தினார். தெலுங்கானாவில் ஏதாவது உயர்நீதிமன்றம் தடை பண்ணிருக்கிறதா.. உச்ச நீதிமன்றம் தடை செய்திருக்கிறதா.. அதிகாரம் இல்லை அதிகாரம் இல்லை என்ன அதிகாரம் இல்லை உங்களுக்கு.
இத்தகைய கணக்கெடுப்பு செல்லும் என்றுதான் நீதிமன்றங்கள் அறிவித்துள்ளன. சமூகநீதியைக் காப்பதற்கான கடமையை தமிழக அரசு செய்யத் தொடங்கியது தவறிய நிலையில், அதை சுட்டிக்காட்டி கடமையை செய்ய வைக்க வேண்டியது சமூகநீதி அமைப்புகளின் பொறுப்பாகும்.அந்தப் பொறுப்பை நிறைவேற்ற, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திகிறோம் சமூக நீதியில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, அவற்றின் சார்பில் சென்னை மாநகரில் மாபெரும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.
பாமக சார்பில் இன்று நடைபெற்ற இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தகோரி தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்படுகிறது. இந்த போராட்டத்தை எந்த நாளில் நடத்துவது என்பது குறித்து பிற அமைப்புகளிடமும் கலந்து பேசி முடிவெடுக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என பேசியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இன்றைக்கு மழை வருமா வராதா? எங்கெல்லாம் மழை வரும்... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
எடப்பாடி பழனிச்சாமி தான் எங்கள் எதிரி.. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒன்றிணைந்து பகிரங்க பேட்டி
கரூர் அதிர்ச்சியிலிருந்து மீண்டுட்டாரா விஜய்.. சிறப்பு பொதுக்குழுவால்.. தொண்டர்களிடையே உற்சாகம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
இந்தியாவில்.. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 லட்சம் பெண் பிரதிநிதிகள்.. பி.வில்சன் பெருமிதம்
திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி: நயினார் நகேந்திரன் வேதனை!
தேவர் ஜெயந்தி விழா... முத்துராமலிங்க தேவருக்கு மனமார்ந்த அஞ்சலி: பிரதமர் மோடியின் பதிவு!
சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா முத்துராமலிங்கத் தேவர்: விஜய்
கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது திமுக அரசு: அண்ணாமலை
{{comments.comment}}