அழியா காதலில் நீயும் நானும்

Sep 22, 2026,02:58 PM IST

- கவிதாயினி டாக்டர் எஸ்.மணிமேகலை


சட்டென்று எனக்குள் வந்து நின்றாயே 

பட்டென்று பறவையாய் சிறகடித்து பறந்தாயே


கட்டான மல்லிகை மலர்களால் மயக்காதே

வட்டமடித்த விழிகளால் வாகாய் வாட்டாதே


கட்டிய காதல் கோட்டையை மறந்திடாதே

விட்டு வெகு தூரம் சென்றிடாதே


கொட்டிட்ட அமிர்தம் என்றும் இழந்திடாதே

தொட்டிட்ட இன்பம் என்றும் குறைந்திடாதே




குட்டியான இதயத்தை ஒருபோதும் மூடிடாதே

வட்டி போட்டு பெருகும் அன்பை அழித்திடாதே


எட்டி நின்றே பார்க்கிறேன் மறுத்திடாதே

மொட்டு விரியும் நேரம் மலைத்திடாதே


முட்டிய காதலின் ஆழத்தில் மயங்கிடாதே

கிட்டிய பாச கனவை கலைத்திடாதே


கட்டிக் கொள்வோமா கனிவாய் பார்த்தாயே

சிட்டாய் சிலிர்க்கிறாய் சம்மதம் தருவாயே


(கவிதாயினி டாக்டர் எஸ் மணிமேகலை. செட்டிநாட்டை சேர்ந்த இவர் மதுரையில் பிறந்து வளர்ந்து இன்று ஈரோட்டில் சிறந்த அக்குபஞ்சர் மருத்துவராக உள்ளார். மருத்துவம் தவிர்த்து ஆன்மீக சொற்பொழிவு இசை கலை ஓவியத்திறமை மற்றும் பாடும் புலமை மிக்கவர். சிறந்த கவிஞர், எழுத்தாளர். நமது தென் தமிழ் இணையதளத்தில்

...மணிமா ..என்ற பெயரில் செட்டிநாட்டு ரெசிபி எழுதிக் கொண்டிருக்கிறார். தனது பத்தாவது வயதில் மறைந்த கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களிடம் மதுரையில் கவிதாயினி என்ற பெயர் சூட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல.. அழகான உறவின் அடையளம்.. அண்ணன் தங்கை!

news

ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை

news

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்...தீவிரடையும் விசாரணை

news

ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி

news

அழியா காதலில் நீயும் நானும்

news

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்

news

காலம் பொன் போன்றது

news

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி

news

அறிந்த பழமொழிகளும், அறியாத அர்த்தங்களும்.. கழுதைக்குத் தெரியுமா??

அதிகம் பார்க்கும் செய்திகள்