கார்த்திகை திங்களும் ஒளிரும் தீபமும்

Nov 24, 2026,03:44 PM IST

- டாக்டர் எஸ். மணிமேகலை, ஈரோடு

 

கார்த்திகை திங்கள் கனிந்திடும் வேளை

கண்ணுக்குள் மின்னும் கவின்மிகு சோலை


வாசலில் கோலங்கள் வண்ணமாய் மலரும்

வாசனைப் பூக்கள் வசந்தமாய் மணக்கும்


திருநாளில் இல்லத்தின் தீபங்களோ அழகு

தெருவெங்கும் ஒளிரும் தெய்வீகம் பேரழகு


அகல் விளக்கை ஏற்றிடும் நேரம்

அல்லல் நீங்கி ஆனந்தம் பெருகும்


எண்ணையால் நிறைந்து பிரகாசிக்கும் அகல்கள்

எண்ணங்களால் மலரும் மகிழ்வின் மனங்கள்




நெய் விட்டு ஏற்றும் தீபமும் ஒளிர்ந்திடும்

நிம்மதி வாழ்வில் நிலையாய் சேர்ந்திடும்


மலைமீதே சுடர்விடும் மகா தீப ஜோதி

மனமெல்லாம் மகிழ்ந்திடும் மகேசன் கீர்த்தி


இருளை போக்குவது ஒளியின் கடமை

இன்னலை வெல்வது மனங்களின் பெருமை


கார்த்திகைத் திங்களில் ஒளிரும் தீபமே

காலங்கள் கடந்தாலும் தமிழரின் இன்பமே


அன்பெனும் தீபத்தை அகத்தினில் ஏற்றுவோம்

அறமெனும் பாதையை அடியினை மாற்றுவோம்


ஒளியில் தீபங்கள் நிறைவாய் மிளிரட்டும்

உயிரில் மனித நேயம் உயர்வாய் சிறக்கட்டும்


(கவிதாயினி டாக்டர் எஸ் மணிமேகலை. செட்டிநாட்டை சேர்ந்த இவர் மதுரையில் பிறந்து வளர்ந்து இன்று ஈரோட்டில் சிறந்த அக்குபஞ்சர் மருத்துவராக உள்ளார். மருத்துவம் தவிர்த்து ஆன்மீக சொற்பொழிவு இசை கலை ஓவியத்திறமை மற்றும் பாடும் புலமை மிக்கவர். சிறந்த கவிஞர், எழுத்தாளர். நமது தென் தமிழ் இணையதளத்தில் மணிமா என்ற பெயரில் செட்டிநாட்டு ரெசிபி எழுதிக் கொண்டிருக்கிறார். தனது பத்தாவது வயதில் மறைந்த கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களிடம் மதுரையில் கவிதாயினி என்ற பெயர் சூட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கார்த்திகை திங்களும் ஒளிரும் தீபமும்

news

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற நயினார் நாகேந்திரன் நெல்லையில் கைது

news

ஐந்நூறு ஆண்டுகளைக் கடந்தும் ஒலிக்கும் பாண்டிய மன்னரின் பக்தி!

news

நீரின்றி அமையாது உலகு!

news

லட்சோப லட்சம் பக்தர்களால் திண்டாடும் திருவண்ணாமலை.. காத்திருக்கும் தீபங்கள்!

news

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷூக்கு எதிராக வழக்குப்பதிவு : வீட்டில் போலீஸ் குவிப்பு...கைதாகிறாரா?

news

பெண் கலெக்டர் புகார் : நீதிபதி சரமாரி கேள்வி...வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

news

மாபெரும் வலி வேறொன்றும் இல்லை!

news

அரசமர டீக்கடைக்கு வந்த புதிய நெருக்கடி.. வேரில் இருந்து விழுது வரை (9)

அதிகம் பார்க்கும் செய்திகள்