திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற நயினார் நாகேந்திரன் நெல்லையில் கைது

Nov 24, 2026,03:34 PM IST

நெல்லை : கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை தரிசிப்பதற்காக செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் தடுத்து நிறுத்தி, கைது செய்யப்பட்டுள்ளார்.


திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான விவகாரம் தமிழக அரசியல் களத்திலும், சமய நிகழ்வுகள் சார்ந்த விவாதங்களிலும் சமீப நாட்களாகப் பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்தச் சூழலில், சம்பந்தப்பட்ட நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் காவல்துறை தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 




அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நெல்லையில் உள்ள நயினார் நாகேந்திரனின் இல்லத்தைச் சுற்றிலும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரும் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தான் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என நயினார் நாகேந்திரன் தரப்பில் கூறரப்பட்டது. இதனையடுத்து பிற்பகலில் அவர் திருப்பரங்குன்றம் புறப்படுவார் என சொல்லப்பட்டது.


பிற்பகலில் திருப்பரங்குன்றம் புறப்பட்ட நயினார் நாகேந்திரனை நெல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், திருப்பரங்குன்றத்திற்கு செல்வதற்கு தானே தடை உள்ளது. நான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தான் செல்கிறேன். மதுரையில் தடை உத்தரவு இருப்பதால் அங்கு செல்ல அனுமதிக்க முடியாது எனக் கூறி போலீசார் என்னை தடுக்கிறார்கள். இது தனி மனித உரிமையை ஒடுக்கும் செயலாகும் என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கார்த்திகை திங்களும் ஒளிரும் தீபமும்

news

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற நயினார் நாகேந்திரன் நெல்லையில் கைது

news

ஐந்நூறு ஆண்டுகளைக் கடந்தும் ஒலிக்கும் பாண்டிய மன்னரின் பக்தி!

news

நீரின்றி அமையாது உலகு!

news

லட்சோப லட்சம் பக்தர்களால் திண்டாடும் திருவண்ணாமலை.. காத்திருக்கும் தீபங்கள்!

news

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷூக்கு எதிராக வழக்குப்பதிவு : வீட்டில் போலீஸ் குவிப்பு...கைதாகிறாரா?

news

பெண் கலெக்டர் புகார் : நீதிபதி சரமாரி கேள்வி...வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

news

மாபெரும் வலி வேறொன்றும் இல்லை!

news

அரசமர டீக்கடைக்கு வந்த புதிய நெருக்கடி.. வேரில் இருந்து விழுது வரை (9)

அதிகம் பார்க்கும் செய்திகள்