சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்பட்டாலும்,ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பனியின் தாக்கம் குறைந்து வெயில் அதிகரித்து வருகிறது. பனிக்காலம் முழுமையாக நிறைவடையாமல் இப்பொழுதே வெயில் அதிகரித்து வரும் நிலையில் இனி கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ என மக்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் தற்போது தென் மாவட்ட பகுதிகளில் வெயில் அதிகரித்து காணப்படுகிறது. அதே சமயம் வட தமிழ்நாடு பகுதிகளில் ஒரு சில இடங்களில் கடுமையான பனிமூட்டமும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் வெயில் நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். அதே சமயத்தில் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
இதனைத் தொடர்ந்து 7.2.2025 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
8.2.25 முதல் 11.2.25 வரை தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும் என அறிவித்துள்ளது.
அதேபோல் சென்னையை பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்சமாக 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்சமாக 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக் கூடும் என அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!
நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!
புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்
10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?
எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி
74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
{{comments.comment}}