துபாய்: மீண்டும் ஒரு பேய் மழையை துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் சந்தித்துள்ளன. இதன் காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணி புரிய உத்தரவிட்டுள்ளன. பூங்காக்கள், கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்புதான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பேய் மழை பெய்து மக்களை ஸ்தம்பிக்க வைத்தது. பலர் அதில் உயிரிழந்தனர். நகரங்கள் பலவற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடிய காட்சிகளை மறந்திருக்க முடியாது. இந்த நிலையில் நேற்று மீண்டும் பேய் மழை திரும்ப வந்தது. நேற்றும் இன்றும் புரட்டிப் போட்ட பெரு மழையால் பல ஊர்கள் வெள்ளக்காடாகியுள்ளன. பல விமானங்கள் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
துபாயில் மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஒர்க் பிரம் ஹோம் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. கடற்கரைகள், பூங்காக்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த இன்டிகோ நிறுவனம் துபாய், ஷார்ஜா, ரஸ் அல் கைமா, அபுதாபிக்கு இயக்கி வரும் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வருகை, புறப்பாடு ஆகியவற்றில் தாமதம் மற்றும் சிக்கல் நிலவுவதாக அது தெரிவித்துள்ளது.
கடந்த மாதம்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பேய் மழை பெய்தது. 1949ம் ஆண்டுக்குப் பிறகு பெய்த மிகப் பெரிய மழையாக இது பதிவானது. இதனால் பல ஊர்கள் வெள்ளத்தில் சிக்கி மிதந்தன. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றதைப் பார்த்து உலகமே அதிர்ந்தது. துபாய் விமான நிலையமே வெள்ளத்தில் சிக்கி மூழ்கியதையும் மக்கள் பார்த்து அதிர்ச்சியுற்றனர் என்பது நினைவிருக்கலாம்.
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!
தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?
ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்
எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?
விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி
இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்
திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!
எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்
நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!
{{comments.comment}}