டிவிட்டர் ஸ்பேஸில் பேசுகிறார் எடப்பாடி பழனிச்சாமி.. கேள்விகளுடன் ரெடியாகுங்க!

Apr 02, 2023,02:45 PM IST
சென்னை:  அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அதிரடிக்குத் தயாராகி விட்டார். 

ஜெயலலிதா மறைவுக்குப்  அதிமுகவில் ஏகப்பட்ட குழப்பங்கள். ஒவ்வொரு குழப்பத்தையும் தாண்டித் தாண்டி தற்போது முக்கிய வெற்றியாக பொதுச் செயலாளர் தேர்வுக்கு இருந்த தடை நீங்கி, அந்தப் பதவியையும் அடைந்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுகவில் தனது ஆதிக்கத்தை அடுத்தடுத்து நிலைநிறுத்தி வந்த எடப்பாடி பழனிச்சாமி, கட்சி நிர்வாகிகளின் முழு ஆதரவுடன் இருக்கிறார். தொண்டர்களின் பலமும் இவருக்கு இருக்கிறதா என்பதை வருகிற லோக்சபா தேர்தலின்போதுதான் தெரிந்து கொள்ள முடியும்.




இந்த நிலையில் அதிமுக ஐடி விங், எடப்பாடி பழனிச்சாமியை அடுத்தடுத்து லெவலுக்குக் கொண்டு செல்லும் பணியைத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக நாளை டிவிட்டர் ஸ்பேஸில் எடப்பாடி பழனிச்சாமி உரையாடவுள்ளார். அதில் கலந்து கொண்டு அனைவரும் எடப்பாடியிடம் பேசலாம் என்று அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அறிவித்துள்ளது.

நாளை இரவு 8.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் டிவிட்டர் ஸ்பேசில் கலந்து கொண்டு பேசவுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்