ஓபிஎஸ்.,க்கு அதிமுகவிலும் இடமில்லை... கூட்டணியிலும் இடமில்லை... இபிஎஸ் திட்டவட்டம்

Jan 08, 2026,06:02 PM IST

டில்லி : ஓபிஎஸ், சசிகலா இருவருக்கும் அதிமுக.,விலும் சரி, கூட்டணியிலும் சரி இடம் கிடையாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அன்புமணி தலைமையிலான பாமக நேற்று காலை அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில், நேற்று உடனடியாக டில்லி புறப்பட்டு சென்றார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக கவர்னரிடம் அளித்த திமுக அமைச்சர்கள் மீதான துறைவாரியான ஊழல் புகார் பட்டியலை ஆதாரங்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து அவர் கொடுப்பதற்காக டில்லி சென்றதாக தகவல்கள் வெளியாகின. நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்தித்து பேசி விட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை சென்னை புறப்பட்ட அவர், டில்லி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.




செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷா புதுக்கோட்டைக்கு வந்த போது அவரை சந்திக்க முடியவில்லை. கள்ளக்குறிச்சி மற்றும் சேலத்தில் பிரசாரம் இருந்ததன் காரணமாக அவரை சந்திக்க முடியவில்லை. அதனால் தான் இப்போது டில்லியில் வந்து அவரை சந்தித்தேன். திமுக அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்பது ஏமாற்று வேலை. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தொழிலாளர்களின் பங்களிப்பும் உள்ளது. திமுக ஆட்சியில் போதை பொருள் நடமாட்டம் அதிகரிக்கரித்ததன் காரணமாக கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் என்பது ஏமாற்று வேலை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மக்களின் கனவுகளை எவ்வாறு நிறைவேற்ற முடியும்?


ஓ.பன்னீர்செல்வத்திற்கோ, சசிகலாவிற்கோ மீண்டும் அதிமுக.,வில் இடமில்லை. அவர்களுக்கு கூட்டணியிலும் இடமில்லை. தமிழகத்தில் அமைய உள்ள கூட்டணி எங்கள் தலைமையிலான கூட்டணி தான். எங்கள் தலைமையில் தான் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்றார். டிடிவி.தினகரனின் அமமுக என்டிஏ கூட்டணிக்கு வந்தால் ஏற்பீர்களா என கேள்வி எழுப்பியதற்கு, அதற்கு இபிஎஸ் மறுப்பு தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலளித்த அவர், சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது பற்றி வெளிப்படையாக பேச முடியாது. கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து, ஒப்பந்தம் முடிவான பிறகு அது பற்றி அறிவிக்கப்படும் என்றார்.


அதிமுக.,வின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக ஒரு போதும் தலையிடாது. அதிமுக.,வின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட போவதில்லை என அமித்ஷா ஏற்கனவே செய்தியாளர்களிடம் வெளிப்படையாக கூறி விட்டார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வழக்கு: நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

news

ஜனநாயகன் பட விவகாரம்... விஜய்க்கு ஆதரவாக.. சினிமா, அரசியல் துறையில் உரத்து ஒலிக்கும் குரல்கள்!

news

மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது...ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் காங்கிரஸ்

news

தவெக தனித்து போட்டியா? கூட்டணியா?... ரகசியத்தை உடைத்த கிரிஷ் சோடங்கர்

news

அமலாக்கத்துறை ரெய்டு என்ற பெயரில் டேட்டாக்களை திருடுகிறார்கள்...மம்தா பகீர் குற்றச்சாட்டு

news

'பழைய ஓய்வூதிய திட்டமே நிரந்தர தீர்வு': தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை

news

சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி: உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026...நாம் தமிழர் கட்சிக்கு டஃப் கொடுக்க போவது யார்?

news

கூட்டணி அமைப்பதற்கே திண்டாட்டம்...அதிமுக கூட்டணி பற்றி திருமாவளவன் கிண்டல்

அதிகம் பார்க்கும் செய்திகள்