சென்னை: அதிமுக ஆட்சியில் அமைதி, வளம், வளர்ச்சிப் பாதையில் சென்றுக்கொண்டிருந்த தமிழ்நாட்டை, பட்டாக்கத்தி, அரிவாள், துப்பாக்கியின் பாதைக்கு கொண்டு சென்றுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என்று எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பாமக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி, கடந்த 11.06.2025 அன்று இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததாக ஸ்டாலின் மாடல் திமுக அரசால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் துப்பாக்கியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூராய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது.
அஇஅதிமுக ஆட்சியில் அமைதி, வளம், வளர்ச்சிப் பாதையில் சென்றுக்கொண்டிருந்த தமிழ்நாட்டை, பட்டாக்கத்தி, அரிவாள், துப்பாக்கியின் பாதைக்கு கொண்டு சென்றுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இதே இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் பாபு துப்பாக்கி வைத்திருந்த போதே, இந்த அரசை நான் எச்சரித்தேன்.

ஆனால், துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஒன்றுமே இல்லை! ரோடு ஷோவிலும் , போட்டோஷூட்டிலும் இருக்கும் கவனம், சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பதிலோ, மக்களைக் காப்பதிலோ இந்த பொம்மை முதலமைச்சருக்கு துளியும் இல்லை! பாமக மாவட்ட இளைஞரணி நிர்வாகி சக்கரவர்த்தி கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்;
கள்ளத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும்; தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழித்திட வேண்டும் என மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.1,760 உயர்வு
டெல்லி செங்கோட்டை அருகே நடந்தது தற்கொலைப் படைத் தாக்குதலா.. புதுத் தகவல் வெளியானது!
தேசிய கல்வி தினம் (National Education Day) இன்று!
கூட்ட நெரிசல் விவகாரம்.. அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு விரைவில் கரூர் வருகை
நடிகர் தர்மேந்திரா நலமாக இருக்கிறார்.. வதந்திகளை நம்பாதீர்கள்.. மகள் ஈஷா தியோல் கோரிக்கை
பீகார் சட்டசபைத் தேர்தல்.. 2வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 11, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரப் போகும் ராசிகள்
அனைத்துக் கோணங்களிலும் விசாரணை.. உண்மையை கண்டறிவோம்.. அமைச்சர் அமித்ஷா
டெல்லி செங்கோட்டை அருகே.. கார் வெடித்துச் சிதறியது.. பலர் பலி.. டெல்லி முழுவதும் உஷார்
{{comments.comment}}