எதிர் நீச்சல்!

Jun 25, 2026,04:33 PM IST

- சிவ.ஆ. மலர்விழி ராஜா


நம்பிக்கை நடை பயில

முடியாது என்ற சொல்லை  மூச்சடக்கி முயற்ச்சித்து 

முன்னேறும் நிலை அதுவே எதிர் நீச்சல்......!


தோல்விகள் தொடர்ந்து வர துயில்கின்ற நிலையிலுமே

துரத்துகின்ற  கனவுகளை துயில் எழுந்து துரத்துவதும்

எதிர்நீச்சல்.....!


நம்பிக்கை வேரூன்றி

மண்ணை முட்டி வெளிவந்து 

விருட்சமென வளர்வதுவும்  சிறு விதையின்

எதிர் நீச்சல்......!




துடுப்புகள் இல்லா படகை போல் தடம் மாறி

சென்றாலும் இலக்கை

வெல்லும் நுண்ணறிவே

எதிர் நீச்சல்......!


தளராத மனம் கொண்டு 

தடைகளை எதிர்த்து போராடி தளிர் நடை போடுவதும் 

எதிர் நீச்சல்......!


கண்ணீரே பலமென்று

காயங்கள் துணையாக்கி  தோல்வி 

தரும் பரிசுகளை துரும்பாக்கி வெல்வதுவே

எதிர்நீச்சல்.....!


துன்பம் தரும் வாழ்வை கண்டு துடி துடித்து போகாமல் 

கரை தொடும் அலைபோல

மீண்டும் மீண்டும் 

தொடர்வதுவே

எதிர் நீச்சல்.....!


தண்ணீரில் நீந்துவதல்ல எதிர் நீச்சல்

தள்ளாடும் வயதினிலும் தளராத மனம் கொண்டு 

தனிமையை திறமையால் வெல்வதுவே 

அழகான எதிர் நீச்சல்.....!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!

news

சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!

news

மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!

news

தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!

news

மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

அதிகம் பார்க்கும் செய்திகள்