தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்.. விஜய் சொன்ன ஹேப்பி நியூஸ்!

Sep 08, 2024,06:05 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட கட்சியாக தேர்தலில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளதாக கட்சித் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.


நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் செய்துள்ளார். புதிய கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியுள்ளார். கட்சி தொடர்பான பணிகள் ஒரு பக்கம் வேகமாக நடந்து வருகிறது. முதலில் கொடியை சமீபத்தில் அறிமுகப்படுத்தினார்கள். அடுத்து மாநில மாநாடு நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 


இந்த மாநாட்டுக்கான அனுமதி கோரி விழுப்புரம் மாவட்ட எஸ்பியிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக 21 கேள்விகளை காவல்துறை கேட்டிருந்தது. அந்தக் கேளவிகளுக்குரிய பதில்களை தவெகவும் அளித்து விட்டது. இந்த நிலையில் நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.




இந்த நிலையில், தற்போது விஜய்யிடமிருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற அடிப்படை கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவித கொள்கை கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும் அரசியல் கட்சிக்கான சட்டபூர்வமான பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது.


தமிழக வெற்றி கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதை சட்டபூர்வமாக பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம் தற்போது நம் தமிழக வெற்றிக்கழகத்தை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து தேர்தல் அரசியலில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக பங்கு பெற அனுமதி வழங்கி உள்ளது. இதை உங்களோடு பகிர்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.


திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக இப்போது முதல் கதவு நமக்காக திறந்து இருக்கிறது. இச்சூழலில் நமது கழகத்தின் கொள்கை பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்.


தடைகளை தகர்த்தெறிந்து கொடி உயர்த்தி கொள்கை தீபம் எது தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாக தமிழ்நாட்டில் வலம் வருவோம் என்று விஜய் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!

news

என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்

news

அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

news

ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

news

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 1996 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்!

news

தமிழ் தெரிந்தவர்களுக்கு வடபழநி முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.50,000 வரை சம்பளம்

news

மணக்கமணக்க சாப்பிடலாம்.. மதுரையில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா 2025.. சுவைக்க வாங்க!

news

இலவச விமானப் பயணம்.. ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தரும் அசத்தலான சலுகை!

அதிகம் பார்க்கும் செய்திகள்