தெலங்கானா.. ஒரே ஓட்டில்.. கே.சி.ஆர் கட்சிக்கு 2 வேட்டு வைத்த மக்கள்.. இதை எதிர்பார்க்கலையே!

Dec 03, 2023,06:37 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இதுவரை அங்கு வீசி வந்த கே.சிஆர். அலை முடிவுக்கு வந்து விட்டதை உணர்த்துவதாக உள்ளது. தெலங்கானா ராஷ்டிரிய சமிதியாக உருவாகி பின்னர் பாரதிய ராஷ்டிரிய சமிதி என்று உருமாறிய கே.சந்திரசேகர ராவின் ஆதிக்கம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.


எங்கு தப்பு செய்தோம்.. எப்படி இது நேர்ந்தது.. ஏன் இந்த அதிர்ச்சித் தோல்வி என்ற மிகப் பெரிய கேள்விக்குறிகள் அக்கட்சி முன்பு அணி வகுத்து நிற்கின்றன. பத்து வருடத்திற்கு முன்பு கே.சி.ஆரைத் தாண்டி யாராவது தெலங்கானா மக்களின் மனதைக் கவர முடியுமா என்று கேட்டால், இன்னும் பல பத்தாண்டுகளுக்கு அதற்கு வாய்ப்பே இல்லை என்ற பதில்தான் தெலங்கானா மக்களிடமிருந்து கிடைத்திருக்கும். காரணம், அந்த மாநிலம் பிறக்க முக்கியக் காரணமாக இருந்தவர் கே.சி.ஆர்.


தெலங்கானா மாநிலப் பிரிவினைக்காக அவர் செய்யாத போராட்டம் இல்லை. போகாத இடம் இல்லை. மக்களை ஒன்று திரட்டி இயக்கம் போல போராடினார். பல மாநிலங்களின் ஆதரவைப் பெற்றார். சட்ட ரீதியான போராட்டங்களில் வென்றார். கடைசியில் மாநிலத்தைக் கண்டார்.. அந்த மக்களின் மனதை வென்றார்.. 2 முறை ஆட்சியிலும் இருந்து விட்டார். ஆனால் இப்போது அவரது அவரது அலை முடிவுக்கு வந்து விட்டது.




எந்த மக்களால் கொண்டாடப்பட்டாரோ அதே மக்களால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளார் கே.சி.ஆர். இதை அக்கட்சி எதிர்பார்க்கவில்லை. மாநிலம் உருவானது முதல் நடந்த 2 தேர்தல்களிலும் கேசிஆர் கட்சிதான் வென்றது. இப்போது முதல் முறையாக காங்கிரஸிடம் ஆட்சியைப் பறி கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி முதல் முறையாக தெலங்கானாவில் வெற்றிக் கணக்கை எழுதியுள்ளது.


கேசிஆர் கட்சியின் தோல்விக்கு அவரது குடும்பம்தான் காரணம். ஒரு பக்கம் மகள், இன்னொரு பக்கம் மகன், மறுபக்கம் மருமகன் என்று குடும்ப ஆட்சியாக இது மாறி விட்டது. தெலங்கானா மக்களுக்குக் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றாதது இன்னொரு காரணம். தனது கட்சியில் இருந்த தெலங்கானா என்ற பெயரை மாற்றி பாரதிய என்று மாற்றி வைத்தது மற்றும் ஒரு முக்கியக் காரணம்.


கே.சி.ஆரை தங்களது மண்ணின் மைந்தராக மட்டுமே அந்த மக்கல் பார்க்க விரும்பினர். அவரது தலைமையில் ஆட்சி தொடர்வதையுமே அவர்கள் விரும்பினர். ஆனால் கே.சி.ஆரோ தேசிய அரசியலுக்கு ஆசைப்பட்டார். ஆட்சியை தனது வாரிசுகளிடம் கொடுத்து விட்டு டெல்லி பக்கம் திரும்ப அவர் திட்டமிட்டு வந்தார். இதனால்தான் கட்சியின் பெயரையும் மாற்றினார். இதை மக்கள் ரசிக்கவில்லை.


மறுபக்கம்  கே.சி.ஆர். குடும்பத்தினர் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்தன, குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அமலாக்கத்துறை விசாரணை எல்லாம் சேர்ந்து மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. எல்லாவற்றுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சி அங்கு புத்தெழுச்சியுடன், புது உற்சாகத்துடன் களப் பணியாற்றியது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸுக்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது.


இப்படி ஒவ்வொன்றாக ஒன்று சேர்ந்து கேசிஆர் கட்சியை காலி செய்து விட்டன. இந்த தீர்ப்பின் மூலமாக கேசிஆருக்கு 2 அதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர் தெலங்கானா மக்கள்.. அவரது குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியதோடு, கேசிஆரின் தேசிய அரசியலுக்கும் ஆப்பு வைத்து விட்டனர்.


இப்போது கேசிஆர் வசம் ஒரே ஒரு ஆப்ஷன்தான் உள்ளது.. இந்தியா கூட்டணியில் சரணடைவது அல்லது பாஜக பக்கம் போவது.. தனி அணி கனவெல்லாம் இனி அவருக்கு வேலைக்கு ஆகாது.


மத்தியப் பிரதேசம்: பழிக்குப் பழி வாங்க காத்திருக்கும் காங்.. 6வது "லட்டு"க்கு ஆசைப்படும் பாஜக!

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்