பறந்து போச்சு டிவிட்டர் பறவை..  வந்து விட்டது X!

Jul 24, 2023,12:54 PM IST
கலிபோர்னியா: டிவிட்டர் பறவைக்கு விடுதலை கொடுத்து விட்டு "எக்ஸ்" மயமாகி விட்டது டிவிட்டர்.

டிவிட்டர் தளத்தில் தற்போது நீலப் பறவையை நீக்கி விட்டு எக்ஸை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த எக்ஸ் மாற்றம் தற்போது டிரெண்டாகி வருகிறது.

போன வருஷம் அக்டோபர் மாசம் டிவிட்டரை கைப்பற்றினார் எலான் மஸ்க். அதன் பிறகு அந்த செயலி வேலை செய்ற விதத்துல ஏகப்பட்ட மாற்றங்கள கொண்டு வந்துட்டே இருக்காரு மஸ்க். அதைப் பார்க்கலாம் வாங்க..!



டிவிட்டர்ல இருக்குற ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை.. எவ்ளோ ஆக்டிவா இருக்கோம்.. இதெல்லம் வெச்சு முன்னாடி 'புளூ பேட்ஜ்' இலவசமாக குடுத்தாங்க. இப்போ காசு கட்டினா குடுக்குற மாதிரியும் பிரபலங்களுக்கு இலவசமா குடுக்குற மாதிரியும் மாத்திட்டாங்க.  அரசு அதிகாரிகள், அரசு அமைப்புகளுக்கு தங்க, வெள்ளி டிக்குகள் கொண்டு வந்துருக்காங்க. 

இது மட்டுமில்லாம டிவிட்டர் மூலமாக தவறான விஷயத்தை பரப்பியதால் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பாடகர் கான்யே வெஸ்ட் இவங்கள்ளாம் அதிலிருந்து முடக்கப்பட்டிருந்தார்கள்.  அவர்களுக்கெல்லாம் மீண்டும் அனுமதி கொடுத்தார் மஸ்க்.

இப்போது உச்சகட்டமான ஒரு மாற்றத்துக்கு வந்திருக்கிறார் எலான் மஸ்க். டிவிட்டர்னு சொன்னாலே நமக்கு என்ன ஞாபகம் வரும்?  நீல கலர்ல இருக்குற பறவை தான. ஆனா அதையே இப்போ மாத்தி X என்ற புதிய லோகோவா களத்துல இறக்கி இருக்காரு மஸ்க். 'X' அப்டிங்கிறது எலான் மஸ்க் ஆரம்பிச்ச முதல் கம்பெனியோட பெயர். அது மட்டுமில்லாம இவரோட ராக்கெட் கம்பெனிக்கும் பேர் 'ஸ்பேஸ் X' தான். அந்த வரிசைல இப்போ டிவிட்டர்க்கு 'X'ஐ கொண்டு வர ஒரு வீடியோவையும் ரிலீஸ் பண்ணி இருக்காரு.  அந்த அளவுக்கு மஸ்க்குக்கு எக்ஸ் மேல் ஒரு தனி கிரேஸ் இருக்கு.



சமீப காலமா டிவிட்டரோட மவுசு அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் வருமானம் குறைந்து கொண்டே வருகிறது.  இ‌ந்த நிலைமையை மாத்தவும், சீனாவோட 'வீ சாட்' மாதிரி ஒரு சூப்பர் செயலியை கொண்டு வரணும் என்கிற அவரோட ஆசையை உண்மையாக்கவும் எலான் மஸ்க் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்து இருக்கிறார்னு சொல்றாங்க. பணம் குடுக்கல் வாங்கல் எல்லாம் இதில பண்ற மாதிரியும் கொண்டு வர போறாராம். 

மஸ்க்கோட இந்த மாற்றங்களுக்கு டிவிட்ரிலேயே மக்கள் ஏகப்பட்ட ரியாக்ஷனைக் கொடுத்துட்டு வர்றாங்க. தற்போது டிவிட்டரின் பெயர், லோகோ என எல்லாமே மாறுவது இதன் ஆரம்ப கால பாலோயர்களுக்கு கஷ்டமான விஷயமாகத்தான் இருக்கும். காரணம், டிவிட்டரை தங்களது உறவுகளில் ஒன்றாக பலரும் கருதுவதுதான். புது ரூட்டை எடுக்க இந்த மாதிரி புது அவதாரம் தேவை தான்… மாற்றம் ஒன்றே மாறாதது னு டயலாக் சொல்லிட்டு இன்னொரு பக்கம் மஸ்க்கோட திட்டங்களுக்கு ஆதரவும் குவிகிறது.

மார்க் ஜூக்கர்பெர்க் அவரோட 'மெடா' கம்பெனில இருந்து இந்த மாச ஆரம்பத்துல புதுசா 'த்ரெட்ஸ்' கொண்டு வந்தாரு. இது டிவிட்டர்க்கு போட்டினு பலர் சொல்லி வருகிறார்கள். எனவே மஸ்க்கும் ஏதாவது அதிரடியாக செய்ய வேண்டிய நிலையில் உள்ளார். அந்த வகையில் அவரது எக்ஸ் என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

உங்க மைன்ட் வாய்ஸ் என்ன பாஸ்.. சொல்லுங்களேன்?

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்