டிவீட்டுகளில் "என்கேஜ்மென்ட்" சரிவு.. கடுப்பான எலான் மஸ்க்.. ஊழியர் டிஸ்மிஸ்!

Feb 11, 2023,03:28 PM IST
கலிபோர்னியா: சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கே என்று சொல்வோம் இல்லையா.. அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார் எலான் மஸ்க். தனது டிவீட்டுகளில் என்கேஜ்மென்ட் சரியாக வராததால் கோபமடைந்த அவர் அதுதொடர்பாக ஒரு ஊழியரை வேலையை விட்டு நீக்கியுள்ளார்.



எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கி "ஓனர்" ஆனது முதல் ஒரே அலப்பறையாகத்தான் இருக்கிறது. ஆயிரக்கணக்கானோரை அதிரடியாக வேலையை விட்டு நீக்கினார் மஸ்க். அத்தோடு நிற்காமல் ப்ளூ டிக்குக்கு கட்டணம் விதித்தார். மேலும் பல அதிரடி அறிவிப்புகளையும் வெளியிட்டார். தொடர்ந்து ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார். இதனால் டிவிட்டர் ஊழியர்கள் "விடிஞ்சா வேலை இருக்குமா போய்ருமா" என்ற பதட்டத்திலேயே வேலை செய்து கொண்டுள்ளனர்.

தனது அக்கவுண்ட்டை வைத்தே பல சோதனைகளையும் அவர் செய்து வருகிறார். இதன் மூலம் டிவிட்டர் பயனாளர்களுக்கும் அதை விஸ்தரிக்கும் முயற்சியாக இதை செய்து கொண்டிருக்கிறார் மஸ்க். இந்த நிலையில் தனது டிவீட்டுகளுக்கு என்கேஜ்மென்ட் குறைவாக வருவதை உணர்ந்தார் மஸ்க். பல பயனாளர்களும் கூட இதே புகாரை இவருக்குத் தட்டி விட்டுள்ளனர்.

இதையடுத்து இதுதொடர்பான என்ஜீனியர்கள் குழுவை அழைத்து விளக்கம் கேட்டுள்ளார் மஸ்க். "எனக்கு 1 கோடி10 கோடி பாலோயர்கள் உள்ளனர்.ஆனால் எனக்கு ஆயிரக்கணக்கில்தான் இம்ப்ரசன் வருகிறது.. ஏன் இப்படி" என்று கேட்டுள்ளார் மஸ்க்.   அப்போது ஒரு என்ஜீனியர் தானாக முன்வந்து.. "அய்யா அது வந்து" என்று விளக்கம் கொடுத்துள்ளார். பல்வேறு டேட்டாக்களையும் காட்டி விளக்கியுள்ளார். அதுவரைக்கும் எல்லாம் சரியாகத்தான் இருந்துள்ளது. அந்த விளக்கத்தில் அவர் வைத்த பன்ச்தான் மஸ்க்கை கடுப்பாக்கி விட்டது.

அந்த ஊழியர் கூறுகையில், உங்களது டிவீட்டுகள் மீது மக்களுக்கு ஆர்வம் குறைந்திருக்கலாம். அது ஒரு காரணமாக இருக்கக் கூடும். முன்பு உங்களது டிவீட்டுகளுக்கு என்கேஜ்மென்ட் அதிகமாக வந்த சமயத்தில் உங்களது பாப்புலாரிட்டி அதிகமாக இருந்தது. இதனால் அதிகம் பேர் உங்களது டிவீட்டுகளைப் பார்த்தனர்.. இப்போது பாப்புலாரிட்டி குறைந்திருப்பதால் கூட என்கேஜ்மென்ட் குறைந்திருக்கக் கூடும் என்று அவர் கூற, கடுப்பான மஸ்க் அந்த ஊழியரை டிஸ்மிஸ் செய்து விட்டார்.

"You're fired, you're fired," என்று கூறிய மஸ்க், ஊழியரை வெளியேறுமாறி கூறி விட்டார்.  இதைக் கேட்டு சக ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனராம். இந்த விவகாரம் குறித்து பார்ச்சூன், போர்ப்ஸ் உள்ளிட்ட பல இதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் டிவிட்டர் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் இதுவரை வரவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்