பீட்டாவைச் சீண்டிய மஸ்க்.. இப்படி இருந்தா எப்படிண்ணே.. டிவிட்டர் லாபம் பார்க்கும்??

Jul 17, 2023,11:23 AM IST
சென்னை: போற வாற எல்லோரையும் கலாய்ப்பதே எலான் மஸ்க்குக்கு வேலையாகப் போய் விட்டது. இதனால்தான் அவருக்கு எதிரிகள் ஜாஸ்தியாகி, நிறுவனத்துக்கே ஆபத்தாக போய்க் கொண்டிருக்கிறது.

டிவிட்டரை எலான் மஸ்க் வாங்கியது முதலே அது பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. டிவிட்டரை மஸ்க் வாங்கியது அதை வளர்க்கவா அல்லது அழிக்கவா என்றெல்லாம் கூட பலர் கேட்டு வந்தனர். அந்த அளவுக்குத்தான் எலான் மஸ்க்கின் செயல்பாடுகள் இருந்தன.



பிரபலங்களையெல்லாம் வம்பிக்கிழுப்பது, ஊழியர்களை சரமாரியாக வேலையை விட்டு நீக்குவது, இஷ்டத்துக்குக் கட்டுப்பாடுகளை கொண்டு வருவது, மாற்றுவது என்று குழப்பத்துக்கு மேல் குழப்பமாகவே நடந்து வருகிறார் மஸ்க்.

அவரது இந்த செயல்பாடுகளால்தான் பலரும் அவரை விட்டு விலகிச் செல்ல முக்கியக் காரணம். இவர் நம்மை அசிங்கப்படுத்தி விடுவார் என்ற அச்சத்திலேயே பலர் டிவிட்டரை விட்டு போய் விட்டனர். டொனால்ட் டிரம்ப் மீண்டும் டிவிட்டரில் சேர்க்கப்பட்டாலும் கூட இன்று வரை அதை பயன்படுத்தாமல்தான் இருக்கிறார்.



விளம்பர வருவாயும் பாதியாக குறைந்து போய் விட்டது. காரணம் மஸ்க்தான்.. இப்போது கூட பாருங்கள் பீட்டாவைக் கலாய்த்து கிரேக் என்பவர் போட்ட டிவீட்டின் ஸ்கிரீன் ஷாட்டைப் போட்டு காமெடி செய்துள்ளார் மஸ்க். அந்த ஸ்கிரீன்ஷாட் டிவீட்டுக்கு கிரேக்கும் வந்து பதில் கொடுத்துள்ளார். நான் கேட்ட கேள்விக்கு பீட்டா இதுவரை பதிலே தரவில்லை என்றும் அவர் அலுத்துக் கொண்டுள்ளார்.

இந்த இப்படி இருந்தால் எப்படி டிவிட்டருடன் பிரபலங்கள் நீடித்திருப்பார்கள். இப்போது பீட்டா மஸ்க்குக்கு எதிராக எப்படி ரியாக்ட் செய்யப் போகிறது என்று தெரியவில்லை. எல்லாரையும் இப்படி வம்பிக்கிழுக்க வேண்டியது.. பிறகு வருவாய் போச்சு, விளம்பரம் போச்சு என்று புலம்ப வேண்டியது.. இதுவே மஸ்க்கின் வேலையாப் போச்சு என்று பலரும் கிண்டலடிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?

news

முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

news

டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை

news

மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

news

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்

news

காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு

news

2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்

news

ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!

news

மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்