சென்னை: மறைந்த பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு இசை அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு சாதனை இசை நிகழ்ச்சி சென்னையில் நாளை நடைபெறவுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பீனிக்ஸ் க்ரூ கிளப் அமைப்பின் சார்பில் சென்னையில் நாளை ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்காக ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 240 பாடகர்கள் கலந்து கொண்டு 120 எஸ்பிபி டூயட் பாடல்களை, 12 மணி நேரம் இடை விடாமல் பாடவுள்ளனர். இந்த நிகழ்ச்சி புக் ஆப் ஆசியா ரெக்கார்ட்ஸில் இடம் பெறவுள்ளது.
நிகழ்ச்சியில் தலைமை விருந்தினர்களாக கவிஞர் முத்துலிங்கம், இசையமைப்பாளர் பாலபாரதி, நடிகை நளினி, பின்னணிப் பாடகி நிர்மலா நரசிம்மன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
சென்னை தி.நகர் ஜிஎன் செட்டி சாலையில் உள்ள சர் பிட்டி தியாகராயா ஆடிட்டோரியத்தில் செப்டம்பர் 23ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிக்கு நிகழ்ச்சி முடிவடையும்.
விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பீனிக்ஸ் க்ரூ கிளப் நிறுவனர் கோமதி ஞானம் மற்றும் இணை நிறுவனர் டி. ரமேஷ் ஆகியோர் அழைத்துள்ளனர்.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!
"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு
ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்
ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!
நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்
வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!
Short Story: காணாமல் போன கண்ணன்
{{comments.comment}}