மதுரை : செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க பழனிச்சாமிக்கு தகுதி இல்லை என அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் அம்மாவின் தீவிர விஸ்வாசி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமைக்கு எதிராக பேசியதாக கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்து நீக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உடன் இணைந்து பசும்பொன்னிற்கு சென்றதற்காக அதிமுக.,வின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நேற்று நீக்கப்பட்டதாக அதிமுக தலைமை அறிவித்தது. இந்நிலையில் இது தொடர்பாக கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்துக்களை செங்கோட்டையன் தெரிவித்தார்.

செங்கோட்டையன் அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அமமுக தலைவர் தினகரனிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிளலித்த அவர், செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க பழனிச்சாமிக்கு தகுதி இல்லை. மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அம்மாவின் தீவிர விஸ்வாசி. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எல்லாம் வருத்தப்படக் கூடியவர் கிடையாது செங்கோட்டையன். அழிவை தேடிக் கொள்கிறார் பழனிச்சாமி. இப்போது இருப்பது admk அல்ல; edmk தான். எடப்பாடியின் திமுக, வரும் தேர்தலில் மக்களால் வீழ்த்தப்படும் என தெரிவித்தார்.
அதிமுக.,வின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்ட சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் அடுத்து என்ன செய்ய போகிறார்? அவரின் அரசியல் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?
டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு
ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!
ஆந்திராவில் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 9 பேர் உயிரிழப்பு
வரலாற்றை அரசியலுக்காக தன் மனம் போன போக்கில் பேசுவது பிரதமருக்கு அழகல்ல: செல்வப்பெருந்தகை!
துரோகம் செய்தால் இது தான் நிலைமை...இபிஎஸ் பதிலடி
செங்கோட்டையனை நீக்க பழனிச்சாமிக்கு தகுதியில்லை : டிடிவி தினகரன்
{{comments.comment}}