ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது செல்பி எடுக்க வந்த பெண்ணிடம், கை சின்னத்துக்கு ஓட்டுப் போட்டால் போட்டோ எடுக்கலாம் என்று கூறி அமைச்சர் சி.வி. கணேசன் கலகலக்க வைத்தார்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து, காங்கிரஸ் கட்சியினரை விட திமுகவினர்தான் மிகத் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். மறுபக்கம் இரட்டை இலை களத்தில் நிற்பதால் திமுகவினர் மிக மிக உஷாராக உள்ளனர்.
எந்த ஒரு வகையிலும் பின்னடைவு வந்து விடக் கூடாது என்பதில் திமுக தரப்பு கவனமாக உள்ளது. இதனால் அமைச்சர்கள் படையே பிரசாரத்தில் குதித்துள்ளது. மூத்த அமைச்சர்கள் முதல் இளையவர்கள் வரை அத்தனை பேரும் இறங்கி வேலை பார்த்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனும் தனது குழுவினரோடு தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். திருநகர் 24 வது வார்டு , கிருஷ்ணப்பாளையம்காலனி உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் பிரசாரம் செய்தார். வரிசையாக ஒவ்வொருவரிடமும் வாக்கு கேட்டு வந்த அமைச்சர் கணேசன், ஒரு டீக்கடையைப் பார்த்ததும் சட்டென்று உள்ளே புகுந்தார்.
பாட்டு பாடி ஓட்டு கேட்கும் சீமான்...ட்விட்டரில் தாறுமாறாக டிரெண்டாகும் வீடியோ
டீ மாஸ்டரிடம் நான் ஒரு டீ போட்டுத் தர்றேன் என்று கூறி டீ போட ஆரம்பித்தார். சும்மா சொல்லக் கூடாது.. சூப்பராகவே போட்டார். பின்னர் அந்த டீயை அனைவருக்கும் கொடுத்தனர். அதன் பின்னர் அங்கிருந்தோரிடம் மறக்காம எல்லோரும் கை சின்னத்துக்கு ஓட்டுப் போட்டுடுங்க என்று கூறி விட்டு விடை பெற்றார் கணேசன்.
பின்னர் அவரது பிரசாரத்தின்போது ஒரு பெண் அவரிடம் வந்து சார் உங்களுடன் ஒரு செல்பி எடுக்க வேண்டும் என்று கேட்கவே, தாராளமாக எடுத்துக்குங்க.. ஆனால் கை சின்னத்துக்குத்தான் ஓட்டுப் போடணும் என்று கூறி சந்தடி சாக்கில் ஒரு ஓட்டை கன்பர்ம் செய்து விட்டார் அமைச்சர். அதன் பின்னர் அப்பெண்ணுடன் ஒரு செல்பியும் எடுத்துக் கொண்டார்.
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை
பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்
ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை
Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!
ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி
சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி
போலி நம்பர் பிளேட் காரில் பயணித்தாரா திருமாவளவன்? - இணையத்தில் வைரலாகும் சர்ச்சைச் வீடியோ
{{comments.comment}}