இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில்.. பிப்ரவரி 5 பொது விடுமுறை அறிவிப்பு

Jan 21, 2025,07:07 PM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று ஈரோடு மாவட்டத்திற்கு பொது விடுமுறை அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.


ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம் எல் ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி உடல் நலக்குறைவால் மறைந்ததையடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 10ஆம் தேதி தொடங்கப்பட்டு 17ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 58 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு, வேப்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.




இதன்பிறகு 55 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக இருந்தது.நேற்று  வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் என்பதால், சுயேட்சை வேட்பாளர்கள் 8 பேர் வாபஸ் பெற்றனர்.  பத்மாவதி என்ற பெண் வேட்பாளரின் பெயர் கர்நாடக மாநில வாக்காளர் பட்டியலில் இருப்பதால் அவரது மனுவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை இரு சுயேச்சை வேட்பாளர்கள் வைத்தனர். இதையடுத்து நேற்று நள்ளிரவில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.


இறுதியாக திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 47 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். பாஜக, அதிமுக, தேமுதிக , தவெக, உள்ளிட்ட கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலை புறக்கணித்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.


இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தல் அன்று அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும்  பொது விடுமுறை அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது: ஜோதிமணி எம்.பி.,

news

அச்சச்சோ.. ஆமாங்க இப்ப தாங்க வலிக்குது.. தங்கமே தங்கம்!

news

பராசக்திபட வெளியீட்டிற்கு தடை விதக்க மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

news

ஜனநாயகன்: ஜனவரி 4 முதல் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்

news

தமிழ்ப் படத்துக்கு தமிழ்நாட்டில் தியேட்டர்கள் இல்லை.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குமுறல்!

news

வைகோ நடைபயணம்... திருச்சியில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

கடந்த 4 நாட்கள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வு..சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!

news

ஏறிக் கொண்ட போகும் தங்கம் விலை.. காரணம் என்ன.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதா?

அதிகம் பார்க்கும் செய்திகள்