சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத் தேர்தலில் ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில்முருகன் தடாலடியாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு சமீபத்தில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டார். அவர் ஓபிஎஸ் அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்தவர். மறுபக்கம் அதிமுக சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இப்படி ஆளுக்கு ஒரு வேட்பாளரை எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் அறிவித்ததால் இரட்டை இலை சின்னம் முடங்கும் வாய்ப்பு உருவானது. இதையடுத்து பாஜக உள்ளே புகுந்து பஞ்சாயத்து பேசியது. எடப்பாடி பழனிச்சாமி இறங்கி வரவில்லை. ஆனால் ஓபிஎஸ் இறங்கி வந்தார். தனது வேட்பாளர் வாபஸ் பெறுவார் என்று தெரிவித்தார். இதையடுத்து அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிட்டு தோல்வியுற்றார். டெபாசிட் மட்டுமே அவருக்கு மிஞ்சியது.
இந்த நிலையில் செந்தில்முருகன் திடீரென எடப்பாடி பழனிச்சாமி அணிக்குத் தாவியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர் செல்வம், செந்தில் முருகனை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}