- ஸ்வர்ணலட்சுமி
மாலை நேரம் வந்தாலே வாயெல்லாம் நமநமங்கும். ஏதாவது மொறுமொறுன்னு சாப்பிட்டா சூப்பரா இருக்கும்ல என்று தோன்றும். அதுவும் சுடச் சுட எண்ணெயில் பொறித்தெடுத்த வடை சாப்பிடத்தான் பலருக்கும் வாய் கேட்கும். ஆனால் அதெல்லாம் விடுங்க.. அதை விட சூப்பரான சத்தான ஒரு ஸ்நாக்ஸ் இருக்கு. வாங்க பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

பிரட் - ஆறு ஸ்லைஸ்
சிறிய கொண்டைக்கடலை - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று கட் செய்து கொள்ளவும்
கேரட் - இரண்டு துருவிக் கொள்ளவும்
சோம்பு - அரை ஸ்பூன்
கடலை எண்ணெய் - இரண்டு ஸ்பூன்
மல்லித்தழை - ஒரு கைப்பிடி
கரம் மசாலா - ஒரு ஸ்பூன்
உப்பு காரம் - தேவைக்கு ஏற்ப
செய்முறை
1. பிரட் ஸ்லைஸ் ஒவ்வொன்றாக தோசை கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி லேசாக ப்ரை செய்து கொள்ளவும்.
2. ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சோம்பு சோம்பு போடவும் பிறகு கட் செய்த பெரிய வெங்காயம் நன்றாக வதக்கவும்.
3. சிறிய கொண்டை கடலை 6 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் மூன்று விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும் அதில் சிறிது பெருங்காயம் உப்பு போடவும்.
4. வெங்காயம் வதக்கிய கடாயில் இந்த வேக வைத்த கொண்டைக்கடலை போடவும் பிறகு கரம் மசாலா சேர்க்கவும்.
5.நன்றாக வதங்கியதும் துருவிய கேரட் சேர்க்கவும்
6. உப்பு தேவைக்கு ஏற்ப
7. பிறகு பிரட் கட் செய்து கொள்ளவும்
8. கட் செய்த பிரட் அந்த கடாயில் சேர்க்கவும்
9. அடுப்பை அணைத்துவிட்டு மல்லி தழை சேர்க்கவும்
10. அருமையான சுவையான சத்தான சூடான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி
11. குழந்தைகளுக்கு ஒரு தடவை செய்து கொடுங்கள் மீண்டும் மீண்டும் கேட்பார்கள்
நல்லா ஃபில்லிங் ஆன உணவு. குழந்தைகளும் பெரியவர்களும் மாலை நேர டீ யுடன் சாப்பிட அருமையான ஸ்னாக்ஸ்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கிடைத்தது இங்கிலாந்தில்
எடப்பாடி பழனிச்சாமி டில்லி செல்வதற்கு இதற்கு தானா?
இறுதிக்கட்டத்தை எட்டிய வடகிழக்கு பருவமழை... ஜனவரி 9 மற்றும் 10ம் தேதியுடன் முடிய வாய்ப்பு!
தமிழகத்தில் குளிர்காலத்தில் இயல்பை விட 81% அதிக மழை பதிவு
புதிய வேகம் எடுத்து வரும் தங்கம் வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு...ஜனவரி 17-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
அதிமுக கூட்டணியில் பாமக.,வுக்கு எத்தனை சீட் தெரியுமா?
ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்
பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்...ரிக்டரில் 6.7 ஆக பதிவு
{{comments.comment}}