சிக்கன் கறியை மிச்சம் வைக்காமல் சாப்பிட்ட அப்பா.. கோபமான மகன்.. கடைசியில் ஒரு கொலை!

Apr 06, 2023,03:04 PM IST
மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே வீட்டில் சமைத்து வைத்திருந்த கோழிக்கறியை தனக்குத் தராமல் சாப்பிட்ட தந்தையுடன் மகன் சண்டை போட்டார். அதில் ஆத்திரமடைந்த தந்தை, கட்டையை எடுத்து அடித்ததில் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

குடும்பத்திற்குள் என்ன மாதிரியான சண்டையெல்லாம் வருகிறது என்பதை இப்போதெல்லாம் கணிக்கவே முடிவதில்லை. மிக மிக சாதாரண விஷயங்களுக்களுக்கெல்லாம் சண்டை போட்டு கடைசியில் அது கொலையில் முடிவது சகஜமாகி வருகிறது. 

சரியாக சமைக்காத மனைவியை அடித்துக் கொன்ற கணவன், சினிமாவுக்குக் கூட்டிச் செல்லாத கணவருடன் கோபித்துக் கொண்டு மனைவி தற்கொலை என்று விதம்விதமான துயரச் சம்பவங்களை அடிக்கடி கேள்விப்படுகிறோம். அந்த வரிசையில்,  சிக்கன் ஏன் தரவில்லை என்று கேட்ட மகனை அடித்துக் கொன்றுள்ளார் ஒரு தந்தை.



தென்கனரா மாவட்டம் சுல்லியா தாலுகாவைச் சேர்ந்த குட்டிகர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷீனா. இவரது மகன் பெயர்  சிவராம் (32) . செவ்வாய்க்கிழமையன்று வீட்டில் கோழிக்கறி சமைத்துள்ளனர். சிவராம் வெளியில் போயிருந்தார். ஷீனா சாப்பிட்டு விட்டு ஓய்வாக இருந்துள்ளார்.

வீடு திரும்பிய சிவராம் சாப்பிட உட்கார்ந்தபோது கோழிக்கறி போதுமானதாக இல்லை என்று தெரிகிறது. இதையடுத்து தந்தையுடன் சண்டைக்குப் போனார் அவர். ஏன் எல்லாத்தையும் சாப்பிட்டீங்க என்று கேட்டு வாதிட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ஷீனா, அருகில் இருந்த கட்டையை எடுத்து சிவராமை பலமாக அடித்து விட்டார் ஷீனா.

இதில் சிவராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சுப்ரமண்யா காவல்நிலைய போலீஸார் விரைந்து வந்து ஷீனாவைக் கைது செய்தனர். உயிரிழந்த சிவராமுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனராம்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்