அகமதாபாத் : குஜராத்தில் தனது மருமகளுக்கு மாமனார் மறுமணம் செய்து வைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அம்பாஜி பகுதியை சேர்ந்தவர் பிரவீன் சிங் ராணா. இவர் தனது மூத்த மகன் சித்திராஜ்க்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 6 மாத பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த தீபாவளி பண்டிகையின் போது தனது மூத்த மகன் சித்திராஜ்சுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இந்த சம்பவம் பிரவீன் சிங் ராணா குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியது.
கணவன் இறந்த பின்பும் அம்மாவீட்டிற்கு சொல்லாமல், மாமனார் வீட்டிலேயே குழந்தையை கவனித்து கொண்டு மருமகள் இருந்து வந்துள்ளார். இதனை பார்த்த மாமனார் ராணா தனது மருமகளுக்கு மறுவாழ்க்கை அமைத்து கொடுக்கும் நோக்கில் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து தனது மருமகளுக்கு மாமனார் மாப்பிள்ளை தேடி வந்துள்ளார். இந்நிலையில், தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் மகனை தனது மருமகளுக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.
இதனையடுத்து பிரவீன் சிங் ராணா தனது மருமகளுக்கு தனது உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் ஒரு தந்தை மகளுக்கு திருமணம் செய்து வைப்பது போல திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த திருமணத்தை கோலாகலமாகவும் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் ராணா. அது மட்டுமின்றி ஒரு தந்தையை போல ஆனந்த கண்ணீருடன் தனது மருமகளை வாழ்த்தி வழி அனுப்பியுள்ளார். மருமகளும் உணர்ச்சி பொங்க மாமனாரிடம் இருந்து விடைப்பெற்று சென்ற காட்சி காண்போரை நெகிலச் செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்