சென்னை: இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையும், வேளாண் விஞ்ஞானியுமான 98 வயதான எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.
எம்எஸ் சுவாமிநாதன் கும்பகோணத்தில் 1925ம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை மருத்துவர். 1942ம் ஆண்டு வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சம் இவரது மனதை பாதித்தது. இதனால் வேளாண்துறையை தேர்வு செய்து ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன் விளைவுதான் எதிர்காலத்தில் இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு இவர் வித்திட வாய்ப்பாக அமைந்தது.
கோவையில் இளநிலை பட்டமும், டெல்லியில் முதுநிலை பட்டமும் பெற்றுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். சிறந்த ஆராய்ச்சியாளரான இவர் பல ஆராய்ச்சி கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார்.
இந்தியாவில் கோதுமை புரட்சிக்கும், பசுமை புரட்சிக்கும் வித்திட்டவர்களுள் முதன்மையானவர் எம் எஸ் சுவாமிநாதன். வேளாண் துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தி உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்தவர். உணவுப் பொருட்களை நம் நாட்டில் வித்திட செய்து உணவுபொருட்களின் இறக்குமதியை குறைந்தவர். பட்டினி இல்லாத இந்தியாவை உருவாக்க எண்ணியவர் இவர்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வால்வோ விருது, ராமன் மகசேசே விருது, பத்ம விருதுகள் உள்ளிட்ட 40க்கும் ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளார் எம்.எஸ். சுவாமிநாதன். உலகில் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
தலைவர்கள் இரங்கல்
மறைந்த இவரது உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.எம்.எஸ். சுவாமிநாதன் மறைவுக்கு தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எம்.எஸ். சுவாமிநாதனின் மகள்தான் உலக சுகாதார நிறுவன அதிகாரியான சவுமியா சுவாமிநாதன். கொரோ பரவல் காலகட்டத்தில் சவுமியாவின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது நினைவிருக்கலாம்.
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!
தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?
ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்
எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?
விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி
இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்
திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!
எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்
நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!
{{comments.comment}}