சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து துணிகரமாக தப்பியோடி பரபரப்பை ஏற்படுத்திய ஜெயந்தி, தற்போது பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயந்தி. 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் புழல் சிறையிலிருந்து தப்பி ஓடி விட்டார்.
ஆண்கள் சிறை வழியாக இவர் தப்பி போனது விசாரணையில் தெரிய வந்தது. பார்வையாளர் அறைப் பகுதி வழியாக இவர் வெளியேறியது தெரிய வந்து சிறை நிர்வாகம் அதிரச்சி அடைந்தது. புழல் சிறையிலிருந்து ஒரு கைதி தப்புவது கடந்த 17 வருடங்களில் இதுதான் முதல் முறை என்பதால் சிறைத்துறைக்குப் பெரிய சங்கடமாகி விட்டது.
இதையடுத்து பெண் கைதி ஜெயந்தியை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் தற்போது ஜெயந்தி சிக்கியுள்ளார். பெங்களூரு நிலையம் அருகே உள்ள கெங்கேரி பகுதியில் அவர் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து லிங்கசாமி தலைமையிலான போலீஸ் குழுவினர் அங்கு சென்று ஜெயந்தியைக் கைது செய்தனர்.
முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
{{comments.comment}}