சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று பிற்பகல் 3 மணி மணியோடு வேட்டபுமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், திமுக, அதிமுக, பாஜக, நாதக, மற்றும் சுயேச்சை, வேட்பாளர்கள் என இதுவரை 862 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும், மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த மார்ச் 20 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இந்த வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் திமுக,அதிமுக ,பாஜக நாதாக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என இதுவரை மொத்தம் 862 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது.

அதிகபட்சமாக கரூர் மக்களவைத் தொகுதியில் 67 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பிற தொகுதிகளில் தோராயமான பட்டியல்:
திருவள்ளூர் தனி - ஆண்கள் 10 பெண்கள் 3 மொத்தம் 13
வட சென்னை - ஆண்கள் 27 பெண்கள் 4 மொத்தம் 31
தென் சென்னை - ஆண்கள் 20 பெண்கள் 8 மொத்தம் 28
மத்திய சென்னை - ஆண்கள் 27 மொத்தம் 27. இங்கு பெண் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
ஸ்ரீபெரும்புதூர் - ஆண்கள் 30 பெண் ஒன்று மொத்தம் 31
காஞ்சிபுரம் தனி - ஆண்கள் 10 பெண்கள் 2 மொத்தம் 12
அரக்கோணம் - ஆண்கள் 15 பெண்கள் நாலு மொத்தம் 19
வேலூர் - ஆண்கள் 29 பெண்கள் இரண்டு மொத்தம் 31
கிருஷ்ணகிரி - ஆண்கள் 20 பெண்கள் ஆறு மொத்தம் 26
தர்மபுரி - ஆண்கள் இருபது பெண்கள் 5 மொத்தம் 25
திருவண்ணாமலை - ஆண்கள் 25 பெண்கள் 3 மொத்தம் 28
ஆரணி - ஆண்கள் இருபது பெண்கள் நாலு மொத்தம் 24
விழுப்புரம் தனி - ஆண்கள் 10 பெண்கள் யாரும் இல்லை மொத்தம் 10
கள்ளக்குறிச்சி - ஆண்கள் 11 பெண்கள் இரண்டு மொத்தம் 13
சேலம் - ஆண்கள் 22 பெண்கள் 4 மொத்தம் 26
நாமக்கல் - ஆண்கள் 23 பெண்கள் 7 மொத்தம் 30
ஈரோடு - ஆண்கள் 24 பெண்கள் மூணு மொத்தம் 27
திருப்பூர்- ஆண்கள் 14 பெண்கள் 5 மொத்தம் 19
நீலகிரி தனி - ஆண்கள் 18 பெண்கள் 1 மொத்தம் 19
கோயம்புத்தூர் - ஆண்கள் 13 பெண்கள் இரண்டு மொத்தம் 15
பொள்ளாச்சி - ஆண்கள் 19 பெண்கள் மூணு மொத்தம் 22
திண்டுக்கல் - ஆண்கள் 14 பெண்கள் இரண்டு மொத்தம் 16
கரூர் - ஆண்கள் 37 பெண்கள் 6 மொத்தம் 43
திருச்சிராப்பள்ளி - ஆண்கள் 17 பெண்கள் இரண்டு மொத்தம் 19
பெரம்பலூர் - ஆண்கள் 27 பெண் ஒன்று மொத்தம் 28
கடலூர் - ஆண்கள் 14 பெண் ஒன்று மொத்தம் 15
சிதம்பரம் தனி - ஆண்கள் 7 பெண்கள் 5 மொத்தம் 12
மயிலாடுதுறை - ஆண்கள் 10 பெண்கள் 5 மொத்தம் 15
நாகப்பட்டினம் தனி - ஆண்கள் 14 பெண்கள் இரண்டு மொத்தம் 16
தஞ்சாவூர் - ஆண்கள் 13 பெண்கள் யாரும் இல்லை மொத்தம் 13
சிவகங்கை - ஆண்கள் 18 பெண்கள் 3 மொத்தம் 21
மதுரை - ஆண்கள் 21 பெண்கள் 3 மொத்தம் 24
தேனி - ஆண்கள் 16 பெண் 1 மொத்தம் 17
விருதுநகர் - ஆண்கள் 24 பெண்கள் 3 மொத்தம் 27
ராமநாதபுரம் - ஆண்கள் இருபது பெண்கள் 3 மொத்தம் 23
தூத்துக்குடி - ஆண்கள் 26 பெண்கள் 5 மொத்தம் 31
தென்காசி தனி - ஆண்கள் 9 பெண்கள் 4 மொத்தம் 13
திருநெல்வேலி - ஆண்கள் 32 பெண்கள் 6 மொத்தம் 38
கன்னியாகுமரி - ஆண்கள் 11 பெண்கள் 2 மொத்தம் 13
மொத்த வேட்பாளர்கள் - 860
ஆண்கள் 737
பெண்கள் 123
மொத்தம் எத்தனை பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்ற விவரம் விரைவில் வெளியாகும். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை முடிந்த பிறகு வரும் மார்ச் 30-ஆம் தேதி மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின் சுயேச்சை வேட்பாளருக்கான சின்னம் ஒதுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் - இலங்கை இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் திடீர் ஒத்திவைப்பு
மகளிர் சுதந்திர உலகப் பயணம்!
திமுக கூட்டணியில் காங்கிரசிற்கு 28, மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி
காஸ் ஆட்டோக்களுக்கு சிக்கல்.. காஸ் நிரப்ப நீண்ட க்யூவில் காத்திருப்பபு.. பயணிகளும் பாதிப்பு
நடிகை ஹன்சிகா மோத்வானி - சோஹைல் கதூரியா தம்பதி விவாகரத்து
தீயாய் பரவும் வதந்தி.. பெட்ரோல் பங்குகளில் குவிந்த மக்கள்.. பீதி தேவையில்லை என அரசு விளக்கம்
பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்? - தமிழக அரசிற்கு விஜய் சரமாரி கேள்வி
யோசனை, சிந்தனை, ஒருமுகப்படுத்துதல் (செறிவு) & தியானம்
{{comments.comment}}