ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. முதல் ஆளாக தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
2021ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். இவர் 2023ம் ஆண்டு காலமானார். அதன்பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் சமீபத்தில், உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார்.
இந்நிலையில், தற்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 17ம் தேதியாகும்.

இன்று முதல் ஆளாக தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு மாநகராட்சி வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வேட்பு மனுக்களைதேர்தல் நடத்தும் மணீஸ்சிடம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே வேட்புமனுக்கள் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் 13 மற்றும் 17ம் தேதிகளில் மட்டும் வேட்புமனுக்களை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட மற்ற நாட்கள் அனைத்தும் அரசு விடுமுறை நாட்களாகும். 18ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும் வேட்புமனுவை திரும்ப பெற 20ம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்
ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!
100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!
{{comments.comment}}