டில்லி : 2025-2026 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். இதில் என்னென்ன அறிவிப்புகள் வரும் என தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31ம் தேதியான நேற்று ஜனாதிபதி திரெளபதி முர்முவின் உரையுடன் துவங்கியது. மொத்தம் இரண்டு பிரிவுகளாக நடைபெறும் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி ஜனவரி 31ம் தேதி துவங்கி, பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறும். பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி மார்ச் 10ம் தேதி துவங்கி, ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும்.
நேற்று துவங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரையை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-2025ம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இதில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி எனப்படும் மொத்தம் உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இது கடந்த 6 மாதத்திற்கான பொருளாதார ஆய்வு அறிக்கையாகும். லோக்சபா தேர்தலுக்கு முன்பு 2024ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி 2022-2023 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை ஏற்கனவே நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை பட்ஜெட் உரையுடன் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று, பட்ஜெட் உரைக்கு ஒப்புதல் பெற்றார் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து பார்லிமென்ட்டில் நிதித்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். இதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு லோக்சபாவில் தனது எட்டாவது பட்ஜெட் உரையை அவர் ஆற்ற உள்ளார். இதைத் தொடர்ந்து அவர் வாசித்த பட்ஜெட் உரை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படும்.
இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வேளாண் துணையில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படலாம். அதாவது ரூ.10 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இது உறுதி செய்யப்படாத தகவல் என்றாலும் இது அதிகமானவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் உரை தயார் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கட்சி நிர்வாகிகள் மாற்றம்.. இது களையெடுப்பல்ல.. கட்டுமானச் சீரமைப்பு.. முதல்வர் மு.க. ஸ்டாலின்
சென்னையில்.. நாளையும் பனிமூட்டம் இருக்கும்.. மற்ற பகுதிகளில் ஒரு வாரத்திற்கு.. வறண்ட வானிலை!
சரயு நதிக்கரையில்.. ஜல சமாதி செய்யப்பட்ட.. ராமர் கோவில்.. தலைமை அர்ச்சகர் ஆச்சார்யாவின் உடல்
மார்ச் 22ஆ இல்லாட்டி 23ஆம் தேதியா.. ஐபிஎல் தொடங்குவது எப்போ?.. தொடக்க விழாவுடன் முதல் போட்டி!
ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், 11,344 பட்டுச் சேலைகள்.. இன்று தமிழக அரசிடம் ஒப்படைப்பு
கலையின் கவிதைகள்.. வேண்டும் காதல்..!
இன்னும் எத்தனை உயிர்களை பறிகொடுக்க வேண்டும்?.. பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி!
மீன் குழம்பு வச்சு.. அதுல கொஞ்சம் விஷம் கலந்து.. கள்ளக்காதலனுக்காக கணவனை கொன்ற மனைவி!
Valentine's day: காதலில் உயிர்த்து இருப்பவன் நான்.. நிறைந்து நிற்பவள் நீ.. இணைந்து நிற்பது நாம்!
{{comments.comment}}