மதுரை: மதுரை தனியார் மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இருப்பினும் இந்த தனியார் மருத்துவமனை தற்போது செயல்பாட்டில் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மதுரை அழகர் கோவில் செல்லும் சாலையில் புதூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் திடீரென இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டனர். தற்போது தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

முன்னதாக இந்த மருத்துவமனை தற்போது செயல்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் ஏற்கனவே நோயாளிகள் வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். செவிலியர்கள் மட்டுமே தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர். இன்று அதிகாலை என்பதால் செவிலியர்கள் அனைவரும் பணிபுரிய சென்று விட்ட நிலையில் அப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் நடக்கவில்லை.
விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய சாலையில் அமைந்துள்ள இந்த தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனால் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
இப்படித்தான் திண்டுக்கல்லிலும் சமீபத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டது. தற்போது மதுரையில் நடந்துள்ளது. இதே மதுரையில் சில மாதங்களுக்கு முன்பு மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்து உயிரிழப்புச் சம்பவம் நிகழ்ந்தது என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}