சென்னை: சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பனியுடன் போகி புகையும் சேர்ந்து ஸ்தம்பிக்க வைத்தன என்றால் இன்று கடும் பனி மூட்டத்தால் சாலைகளில் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் நேற்று காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. கூடவே போகி புகையும் சேர்ந்து கொள்ளவே காலையில் கடும் புகை மற்றும் பனி மூட்டமாக காணப்பட்டது. இதனால் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்வதில் தடுமாற்றம் ஏற்பட்டது. காலை 9 மணி வரை பனி மூட்டமும், புகை மூட்டமும் விலகாமல் இருந்து வந்தது.

இதன் காரணமாக வாகனங்கள் விளக்குகளை எரிய விட்டபடி செல்ல நேரிட்டது. விமானப் போக்குவரத்தும் கடும் பாதிப்பை சந்தித்தது. இந்த நிலையில் இன்றும் காலையில் பனி மூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் இன்றும் நெடுஞ்சாலைப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
காலை 9 மணி வரை பனி விலகாமல் இருந்து வந்ததால் விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சென்றன. காலை விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பனி மூட்டம் சில நாட்களுக்குத் தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}