திங்கள் சிந்தனை: எப்படிப்பட்ட ஆசைக்கு இந்த பிரபஞ்சம் உன்னுடன் வரும்?

May 25, 2026,10:09 AM IST

- வீ. தமிழ்ச்செல்வி


ஒரு பைத்தியக்காரத்தனமான ஆசை.. எப்படிப்பட்ட ஆசைக்கு இந்த பிரபஞ்சம் உனக்காக உடன் வரும்.. நீ உறுதியுடன் செயல்படும் பொழுது..


உன் குறிக்கோளை அடைவதற்கு எல்லை இல்லா முயற்சிகளை செய்ய வைக்கும்..


இந்த உலகத்துல பறக்குறதுக்கும் ஆசைப்படு.. பெரிய கடல்ல மெதக்கறதுக்கும் ஆசைப்படு.. எத்தனை இடர்கள் வந்தாலும் எதிர்த்துப் போராடு..


நம் எண்ணங்கள் வெறும் கனவாக போய்விடாமல் அது நிஜமான சாதனையை நிகழ்த்துவதற்கு அதீத சக்தி பிறக்கும். அப்போ நாம் போகும் வழியில்  ஏற்படும் தடைகளைத் தாண்டி  அசாத்திய திறமையும் வலிமையையும் நம்மால் உணர முடியும்.




உன்னால் முடியும்.. சிலர், இது அவசியமற்றது, பொருத்தமற்றது, வீண் வேலை  சிலர் என்றாலும் முன்னேற்றம் மட்டுமே உன் இலக்காக வேண்டும். விமர்சனங்களை விளக்கி விட்டு உன் கனவுகளை நிஜமாக்க அனுபவங்களை உரமாகக் கொண்டு நடைபோட்டுக் கொண்டே இரு..


மிகப்பெரிய சூரைக்காற்று வீசும் பொழுது சமாளிப்பதில் சிரமம் ஏற்படலாம்.. அதை கடின விடாமுயற்சியோடு எதிர்கொள்வதில் தான் மனம் வலிமை பெறுகிறது ...


நீ செல்லும் பயணம் உன் இறுதி இலக்கினை ஈட்டி தரும் பயிற்சியாகவும் அமையலாம்.. பயந்து விடாதே ..

பயிற்சி கொள் வெற்றியை நோக்கி விரைந்து செல்.. எப்போதும் வேகத்தோடு சேர்ந்த தைரியத்தையும், புத்தி கூர்மையும் சந்தோஷமான முகத்தையும் இந்த உலகம் அவ்வளவு எளிதா மறக்க மாட்டாங்க வெற்றி நம்ம கையில் தான்!


கண்டிப்பா அதை நம்மால் உணர முடியும்..!


(வீ. தமிழ்ச்செல்வி, பட்டதாரி ஆசிரியர், அங்குசெட்டிப்பாளையம், பண்ருட்டி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்