சென்னை: டாக்டர் வி. மைத்ரேயன் திமுகவில் இணைந்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
புற்றுநோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் வி. மைத்ரேயன் பல ஆண்டுகளாக அரசியலிலும் பிசியாக உள்ளார். ஆரம்பத்தில் அவர் பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். அதாவது 1991ம் ஆண்டு முதல் 1999 வரை அவர் பாஜகவில் இருந்தார். அதன் பின்னர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவரை எம்.பியாக்கி அழகு பார்த்தார் ஜெயலலிதா. 3 முறை ராஜ்யசபா எம்.பியாக இருந்தார் மைத்ரேயன்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு யார் பக்கம் போவது என்று பலரும் குழம்பியது போல மைத்ரேயனும் குழம்பினார். இருப்பினும் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் அவர் திரும்பினார். பின்னர் அங்கிருந்து பாஜகவுக்குப் போனார். இடையில் அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. மறுபடியும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டார். இப்படிப்பட்ட பின்னணியில் தற்போது அவர் திமுக பக்கம் வந்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைத்ரேயன் ஏன் அதிமுகவிலிருந்து விலகினார் என்று தெரியவில்லை. சமீபத்தில்தான் அதிமுகவில் மூத்த தலைவராக வலம் வந்த அன்வர் ராஜா கட்சியை விட்டு விலகி திமுகவுக்கு வந்தார். அவருக்கு இலக்கிய அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதேபோல மைத்ரேயனும் திமுகவுக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் தற்போது அமைப்புச் செயலாளராக இருந்து வந்தார் டாக்டர் வி. மைத்ரேயன்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஏகப்பட்ட அதிமுக பிரமுகர்கள் திமுகவில் இணைந்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம். பி.கே.சேகர் பாபு, செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் என இந்த லிஸ்ட் மிகப் பெரிதாக உள்ளது. அதில் லேட்டஸ்டாக இணைகிறார் மைத்ரேயன்.
டாக்டர் வி. மைத்ரேயனுக்கு டெல்லி தொடர்புகள் அதிகம். அதைப் பயன்படுத்தி தனது டெல்லி இருப்பை திமுக வலுப்படுத்தும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்காலத்தில் மைத்ரேயனுக்கு ராஜ்யசபா எம். பி. பதவி வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}