குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

Jan 24, 2026,05:19 PM IST

சென்னை: திமுக ஆட்சியில் நடைபெறும் அதிகார துஷ்பிரயோகத்தின் மற்றுமொரு உதாரணம். குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், சேலம் மேச்சேரி பேருந்து நிலையம் அருகே, திமுக நிர்வாகி பிரசாந்த், அவரது அம்மா மற்றும் சகோதரர் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும், "நான் அமைச்சர் ஆள், ஆட்சி எங்களுடையது” என்று கூறி காவல்துறை அதிகாரிகளை மிரட்டுவதால், மேச்சேரி காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. 


திமுக நிர்வாகிகள், சட்டத்தையும், காவல் துறையையும் அச்சுறுத்துவது சாதாரணமாகி விட்டது. திமுக ஆட்சியில், சட்டம், திமுகவினரின் முறைகேடான செயல்பாடுகளுக்கே துணை நிற்கிறது. 




திமுக கட்சியில் இருந்தால், என்ன குற்றம் செய்தாலும் நடவடிக்கை இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது திமுக ஆட்சியில் நடைபெறும் அதிகார துஷ்பிரயோகத்தின் மற்றுமொரு உதாரணம். குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.


சேலம் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும்,  உடனடியாக இந்த சட்ட விரோத மது விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவே சட்டமும், காவல்துறையும். ஆளுங்கட்சியினரின் முறைகேடுகளுக்குத் துணை நிற்பதற்கு அல்ல என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்