டெல்லி: டெல்லி மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்.பாஜவுக்கு வாழ்த்துகள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன் என டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
70 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவையில் கடந்த 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம்ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், பாஜக தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்து வந்தது.
புதுடில்லி சட்டமன்றத் தொகுதியில் கெஜ்ரிவால் மற்றும் பாஜக வேட்பாளர் இடையே கடும் போட்டி நிலவியது. பாஜக வேட்பாளர் பர்வேஷ் சிங் சாகிப் வர்மா 28 ஆயிரத்து 448 வாக்குகள் பெற்ற நிலையில், கெஜ்ரிவால் அவரை விட 3 ஆயிரத்து 182 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்துள்ளார். 18 தொகுதிகளில் அதிகாரப்பூர்வமாக பாஜக வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி பீடத்தில் இருந்த முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்தார். அவரை தொடர்ந்து டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் தோல்வி அடைந்தார். மணீஷ் சிசோடியாவை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தர்வீந்தர் சிங் மர்வா 34 ஆயிரத்து 632 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தற்போதைய முதலமைச்சரான அதிஷி கல்காஜி தொகுதியில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக தலைவரும் முன்னாள் மக்களவை எம்பியுமான ரமேஷ் பிதுரியை 3 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
தொடர்ந்து டெல்லியில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாஜகவினர் அதிக அளவு குவியத் தொடங்கியுள்ளனர். அத்துடன் பாஜகவினர் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லி மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். பாஜகவுக்கு வாழ்த்துகள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நம்புகிறேன். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் என்று டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மறைத்த அன்பு.. மலரின் வேரில் மறைந்த கதை.. மீண்டும் மங்கலம் (9)
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து.. நவம்பர் 16ல் தவெக போராட்டம்?.. விஜய் வருவாரா??
ரயில் நிலையங்களில் இட்லி சரியில்லையா.. சாம்பார் டேஸ்ட்டா இல்லையா.. QR கோட் மூலம் புகார் தரலாம்
விஜய் பக்கம் திரும்புகிறதா காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் சலசலப்பா.. என்ன நடக்கிறது?
கமல் தயாரிக்கும் தலைவர் 173 படத்தில் இருந்து சுந்தர் சி விலகல்...பரபரப்பு விளக்கம்
அடி என் தங்கமே. இதுக்குப்போய் யாராவது கவலைப்படுவாங்களா?.. புதுவசந்தம் (7)
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 55%ல் இருந்து 58% ஆக உயர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
நெகிழ்வான மனம் கொண்டு உனதன்பை பரிசென்று..... மகிழ்வோடு தேடி வந்தேன் இறைவா!
மேகதாது அணை விவகாரம்.. திட்ட அறிக்கை தயாரிக்க கா்நாடகாவுக்கு உச்ச நீதிமன்ற அனுமதி!
{{comments.comment}}