சென்னை: லோக்சபா தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினரும் தோல்வியை தழுவிய நிலையில் ஒற்றுமையால் அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓ.பி.எஸ் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் எம்ஜிஆர் ஜெயலலிதா உருவாக்கிய இக்கட்சியை உடைத்து விடக்கூடாது எனவும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், வேண்டுகோள் விடுத்தும் வருகின்றனர்.
18 ஆவது லோக்சபா தேர்தல் இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற்று வந்தது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி, மே ஒன்றாம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் என மொத்தம் ஏழு கட்ட தேர்தல்களும் நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு புதுச்சேரியில் திமுக 40 க்கு 40 என அனைத்து தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் அதிமுக ஒரு தொகுதியைக் கூட வெற்றி பெறவில்லை. மாறாக 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக இந்த லோக்சபா தேர்தலில் அதிமுக வாக்கு எண்ணிக்கையில் பல இடங்களில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அதிமுகவில் நிலவிய உட்கட்சி பூசலால் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. இதனால் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஓபிஎஸ் தனியாக போட்டியிட்டார். இதில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 40 தொகுதிக்குமான அதிமுக வேட்பாளர்களும், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ பன்னீர் செல்வமும் படுதோல்வியை தழுவினர்.
இரு தரப்பினரும் படு தோல்வியை சந்தித்துள்ள நிலையில் அன்பு தொண்டர்களே கலங்க வேண்டாம். வருங்காலம் நமக்கானது வாருங்கள். வெற்றி அடைவோம். புதிய சகாப்தம் படைப்போம். சிலரின் சொந்த கருத்துக்காக அதிமுகவை பிரிப்பது தவறு. ஜெயலலிதாவின் இல்லம் உங்கள் அனைவரையும் வரவேற்கிறது. அதிமுக அழிவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது எனக் கூறி எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் என அனைவரும் இணைய வேண்டும் என நேற்று அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா அறிக்கை விடுத்து இருந்தார்.
தற்போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஒற்றுமையால் அதிமுகவை மீட்டெடுக்க அறைக்கூவல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
அதிமுகவினர் அனைவரும் ஒன்றிய வேண்டும். இனியும் சமாதானம் சொல்லி அதிமுக தொண்டர்களை தோல்விக்கு பழக்குவது பாவ காரியமாகும். ஒற்றைக் குச்சியை உடைப்பது சுலபம் கற்றைக்குச்சியை முறிப்பது கடினம். ஒற்றுமையால் அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஓபிஎஸ்ஸின் இந்த அறிக்கையால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து எடப்பாடி பழனிச்சாமியின் முடிவு என்னவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}