சென்னை: ஆளும் கட்சிக்கு ஒரு நீதி? எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா? மாலையில் ஆளும் கட்சி போராட்டம் அறிவித்து காலையில் நடத்துகிறது. சட்டத்தை வளைக்காதீர்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று சட்டசபையில் பேசினார்.
தமிழக சட்டசபையில் இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இந்த கவனஈர்ப்பு தீர்மானம் மீது ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், சென்னை காவல் ஆணையர் யாரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார். கைதான ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என்று செய்திகள் வந்துள்ளன. பெண்களின் பாதுகாப்பில் திமுக அலட்சியம் காட்டி வருகிறது. முதல்வர் தற்போது வரை அண்ணா பல்கலை விவகாரத்தில் விளக்கம் தரவில்லை.

கைதான ஞானசேகரின் செல்போனில் அவர் யாரிடம் பேசினாரோ அந்த தொலைபேசி எண்ணை வைத்து எளிதாக கண்டுபிடித்து விடலாமே? அதனை ஏன் செய்யவில்லை. அந்த சார் யார் என்பதை இந்த அரசு வெளியிட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்களை வெளியே கசிய விட்டது எப்படி?. மேலும், முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டு, புகார் அளிக்க வருவோருக்கு ஒரு அச்ச உணர்வை இந்த அரசு ஏற்படுத்தி விட்டது.
போராடியவர்கள் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது இந்த அரசு. போராடிய திமுகவினர் கைது செய்யப்படவில்லை. ஆனால், அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராடிய திமுகவினர் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறார்கள். ஆனால், கைது செய்யப்படவில்லை.
தமிழ்நாடு முழுவதும் யார் அந்த சார் என்ற கேள்வி தான் எழுந்துள்ளது. திமுக ஞானசேகரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். தொடர்ந்து பாலியல் சம்பவம் நடைபெறாத நாளே தமிழகத்தில் இந்த 4 ஆண்டுகளில் இல்லை என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பாலியல் சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டும் நடைபெறவில்லை. எல்லா ஆட்சியிலும் தான் நடைபெறுகிறது. டெல்லி, மும்பையில் நடைபெறவில்லையா? பொள்ளாச்சியில் தான் நடைபெறவில்லையா என்று பதிலடி கொடுத்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
குள்ளி -- சிறுகதை
2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!
Delayed Sleep causes heart attack: தாமதமான தூக்கம் இதயத்தை எப்படி பாதிக்கிறது?.. டாக்டர்கள் அட்வைஸ்!
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!
Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!
பீகாரில் விறுவிறுப்பான சட்டசபைத் தேர்தல்.. சுறுசுறுப்பான முதல் கட்ட வாக்குப் பதிவு
அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
{{comments.comment}}