டெல்லி: நாடு முழுவதும் கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டை என்பது ஒரு தனி மனிதனின் அடையாளத்தைக் குறிக்கும் 12 இலக்க எண்களைக் கொண்ட ஆவணமாகும். அதேபோல் இது தனி மனிதனின் அடையாளம் மற்றும் முகவரி சான்றுக்கான அத்தியாவசிய தேவை ஆகும். மேலும் அரசு சார்பில் வழங்கப்படும் எந்த ஒரு திட்டங்கள் மற்றும் சலுகைகளை பெற ஆதார் அட்டை மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

குறிப்பாக ஆதார் எண் பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு ஒருமுறை ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை புதுப்பிப்பது என்பது ஆதார் அட்டை தொடர்பாக மோசடிகளை தவிர்க்கவும், மக்கள் தொகையை கணக்கிடவும் அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் நாடு முழுவதும் ஆதார் எண்களை புதுப்பிக்க செப்டம்பர் 14 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக (UIDAI)இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்கலாம். 14ஆம் தேதிக்குள் புதுப்பிக்கவில்லை என்றால் செப்டம்பர் 14ஆம் தேதிக்குப் பிறகு கட்டணம் செலுத்தினால் மட்டுமே புதுப்பிக்க முடியும்.
ஆதார் அட்டையை புதுப்பிக்க வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, வங்கிப் புத்தகம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தோடு ஆதார் சேவை மையத்தை அணுக வேண்டும். இந்த ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு ஆதார் அட்டையை புதுப்பிக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}