டெல்லி: காஸாவில் உள்ள அல் அஹிலி அரபு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி மக்கள் 500 பேர் உயிர் இழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கலும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரிடையே கடந்த 12 நாட்களாக போர் நடந்து வருகிறது. இப்போரில் இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் கடுமையாக தாக்கி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் மடிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் காஸாவில் உள்ள அல் அஹிலி அரபு மருத்துமனை மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியதில் 500க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு தாங்கள் காரணம் இல்லை என்றும் ஹமாஸ் ஏவிய ராக்கெட்தான் தவறுதலாக அஹில் அராப் மருத்துவமனை மீது விழுந்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதை காஸா சுகதாரத் துறை இதை மறுத்து, இஸ்ரேல் ராணுவம்தான் இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "காஸாவில் உள்ள அல் அஹிலி அரபு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பல உயிர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள் இருக்கும்.
தற்போது நடந்து வரும் போரில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இது சீரியஸானது. தொடர்ந்து கவலை தருகிறது. இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!
ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் தேங்காயின் மருத்துவ மகத்துவம்!
சர்வதேச தேநீர் தினம்.. சூடா ஒரு டீ சாப்பிட்டுட்டே பேசலாமா பிரண்ட்ஸ்!
100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!
அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்
மனதிற்கு இனிய கணவன் கிடைக்க அருளும் அதிஅற்புத நோன்பு. பாவை நோன்பு....!
மூல முதற் கடவுள்.. விநாயகருக்கு அப் பெயர் வரக் காரணம் என்ன.. தெரியுமா உங்களுக்கு?
கார்த்திகை சோமவார (கடைசி திங்கட்கிழமை) சங்காபிஷேகம்
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
{{comments.comment}}