சென்னை: இளையதளபதி விஜய் நடித்த கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் அனைத்து ஷோக்களும் ஹவுஸ் ஃபுல் ஆனது. இதனால் அடுத்த ஒரு வாரம் வரை கில்லி படத்தை திரையிடுவதாக திரைப்பட உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
விஜய் படம் என்றாலே ரசிகர்களுக்கு சொல்லவா வேண்டும். அது பழைய படமாக இருந்தாலும் சரி.. புதுப் படமாக இருந்தாலும் சரி.. விஜய் ரசிகர்கள் அதனைக் கொண்டாடி மகிழ்வர். தற்போது முண்ணனி நட்சத்திரங்களின் சூப்பர் ஹிட் திரைப்படங்களை ரீ ரிலீஸ் செய்வது பேஷன் ஆகி வருகிறது. அந்த வரிசையில் தளபதி விஜய் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான கில்லி திரைப்படம் 20 வருடங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இப்போதைய விஜய் ரசிகர்கள் பலருக்கும் இந்தப் படம் வந்தபோது பிறந்திருக்கவே மாட்டார்கள்.. எனவே அவர்களுக்கெல்லாம் இப்படம் செம ட்ரீட்டாக இருக்கிறது. இதனால் இளம் தலைமுறை விஜய் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். சுமார் 600 தியேட்டர்களுக்கு மேல் கில்லி திரைப்படம் ரீ ரிலீஸாகி உள்ளது.

இப்படத்தை திரையில் காணும் ரசிகர்கள் விசில் அடித்து உற்சாகமாக நடனமாடி கொண்டாடி வருகின்றனர். இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் சிங்கப்பூர் அமெரிக்காவிலும் நேற்றே ரிலீஸ் செய்யப்பட்டு முன்பதிவு டிக்கெட் முழுவதும் தீர்ந்துவிட்டதாம். கில்லி ரீரிலாஸ் செய்யப்பட்டுள்ள தியேட்டர்களில் அனைத்து ஷோக்களும் ஹவுஸ்புல் ஆகி விட்டதாம். அதனால் இப்படத்தை மேலும் ஒரு வாரம் வரை திரையிடுவதாக திரைப்பட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கில்லி திரைப்படம்:
இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான மாஸ் திரைப்படமான கில்லி படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, தாமு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அப்போது இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், நல்ல வரவேற்பை பெற்றது.
காமெடியிலும், ஆக்ஷனிலும் வித்தியாசமான திரைக்கதையை கொண்டுள்ள இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. இதில் நடிகர் பிரகாஷ்ராஜ், விஜயின் நடிப்பு இன்று வரை ரசிகர்களிடம் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இது தவிர நடிகர் பிரகாஷ்ராஜ் பேசும் ஹாய் செல்லம் என்ற டயலாக் இன்று வரை மிகப் பிரபலமாக உள்ளது நினைவிருக்கலாம்.
குறிப்பாக இப்படத்தில் வரும் காமெடி டயலாக்கான இன்னைக்கு தைப்பூசம் இல்ல.. அதுக்காக முருகனை மறக்க முடியுமா.. என்ற வசனத்தை இளம் தலைமுறையினர்கள் தங்கள் இல்லங்கள் தோறும் தற்போது வரை கலாய்த்து வருகின்றனர்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}